ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதற்கு, இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி சனாதனத்துக்கு எதிராகப் பேசியதே காரணம் என்று பா.ஜ.க-வினரும் காங்கிரஸ் கட்சியினர் சிலரும் கூறி வரும் நிலையில், சனாதன ஒழிப்பு குறித்த தனது பேச்சை இனப்படுகொலை என திரித்து பா.ஜ.க தேர்தல் பிரசாரம் செய்தது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 மாநிலத் தேர்தல் முடிவுகளில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. தெலங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இவற்றில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-விடம் ஆட்சியை இழந்துள்ளது.
இதையடுத்து, 3 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதற்கு காரணம், இந்தியா கூட்டணியில் தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியதே காரணம் என்று பா.ஜ.க-வினரும் காங்கிரஸ் கட்சியினர் சிலர்ம் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூரில் நடைபெற்ற தி.மு.க கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா, கொரோனாவை உருவாக்கும் கொசுக்கள், வைரஸ் போன்றது. அதை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தேன். ஆனால், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க-வினர், சனாதன தர்மத்தை பின்பற்றுவர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பேசியதாக திரித்து தேர்தல் பிரசாரம் செய்தனர்” என்று கூறினார்.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை தி.மு.க கரூர் மாவட்ட இளைஞர் அணி செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதநிதி கூறியதாவது: “சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா, கொரோனாவை உருவாக்கும் கொசுக்கள், வைரஸ் போன்றது. அதை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தேன். ஆனால் பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர், சனாதன தர்மத்தை பின்பற்றுவர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பேசியதாக திரித்து தேர்தல் பிரசாரம் செய்தனர்.
சில சாமியார்கள் என் தலைக்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை விலை வைத்தனர். இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நான் நீதிமன்றத்தை நம்புகிறேன். சனாதன தர்மம் ஒழிப்பு பேச்சுக்காக என்னை மன்னிப்பு கேட்க சொன்னார்கள். ஆனால், இந்த பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது. நான் முதல்வர் ஸ்டாலின் மகன்; கருணாநிதியின் பேரன். என்னுடைய தத்துவத்தை, கொள்கையைத்தான் பேசினேன். அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என கூறிவிட்டேன் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.