Advertisment

'என் வீட்டுக்கு எப்ப வேணா வாங்க; இ.டி-க்கும் மோடிக்கும் பயப்பட மாட்டேன்': உதயநிதி ஸ்டாலின்

நான் மட்டுமல்ல தி.மு.க.,வினர் யாரும் அமலாக்கத்துறைக்கு பயப்படமாட்டார்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

author-image
WebDesk
New Update
Udhay

நான் மட்டுமல்ல தி.மு.க.,வினர் யாரும் அமலாக்கத்துறைக்கு பயப்படமாட்டார்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

என் வீட்டிற்கு எப்ப வேண்டுமானாலும் வாங்க. மோடிக்கும் பயப்பட மாட்டேன். இ.டி-க்கும் பயப்பட மாட்டேன் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் தி.மு.க அரசின் மூத்த அமைச்சர்கள் இருவரை, பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை (ED) விசாரணை செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை, தமிழக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி ஆகியோரின் வீடுகள் மற்றும் சொத்துக்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இதையும் படியுங்கள்: தி.மு.க பல அடக்குமுறை சட்டங்களை சந்தித்த கட்சி, சலசலப்புகளுக்கு அஞ்சாது: மனோ தங்கராஜ்

சோதனைகளுக்குப் பிறகு, குற்றவியல் ஆவணங்கள், கணக்கில் வராத ரூ. 81.7 லட்சம் மற்றும் தோராயமாக 13 லட்ச ரூபாய்க்கு சமமான வெளிநாட்டு நாணயம் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியது. மேலும், அவர்களின் வங்கி கணக்கில் உள்ள ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், அமலாக்கத்துறை என் வீட்டில் வேண்டுமானால் ரெய்டு செய்யட்டும், நான் வரவேற்பேன் என்று கூறினார்.

களக்குறிச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, தான் மட்டுமல்ல தி.மு.க.,வினர் யாரும் அமலாக்கத்துறைக்கு பயப்படமாட்டார்கள் என்று கூறினார்.

“நேற்று, அமலாக்கத்துறையின் அடுத்த ரெய்டு எனது வீட்டில் நடக்கப் போகிறது என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறியதைக் கேட்டேன். அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள், நான் அவர்களுக்கு எனது முகவரியை கொடுக்கிறேன். உங்கள் அமலாக்கத்துறைக்கு நான் பயப்படுவேன் என்று நினைக்கிறீர்கள்? நான் கலைஞர் (மு. கருணாநிதி) பேரன் மற்றும் மு.க.ஸ்டாலினின் மகன். நான் பயப்பட மாட்டேன்” என்று உதயநிதி கூறினார்.

மேலும், "நான் மோடியையோ அல்லது அமலாக்கத்துறையையோ கண்டு பயப்படவில்லை. நீங்கள் (ED) எப்போது வேண்டுமானாலும் வரலாம். நீங்கள் ரெய்டுக்கு வரும்போது எனக்குத் தெரியப்படுத்துங்கள், அதனால் நான் வீட்டில் இருக்க முடியும். நான் மட்டுமல்ல, ஒரு தி.மு.க பிரமுகர் கூட உங்களைப் பார்த்து பயப்பட மாட்டார்கள்,” என்றும் உதயநிதி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Udhayanidhi Stalin Enforcement Directorate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment