சர்வதேச வளரும் நட்சத்திரம்… உதயநிதி ஸ்டாலினுக்கு அமெரிக்க விருது!
Surya-Jyotika, Global Community Oscar for Udayanithi Stalin Tamil News: தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021' என்ற பிரிவில் விருதும், ஜெய்பீம் பட தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021-ம் ஆண்டின் மதிப்புமிக்க விருதும் வழங்கப்பட உள்ளது.
Global Community Oscar Award Tamil News: மனித சமூகங்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக ஹீரோக்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது (குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கார் விருது) அங்கீகரித்து வருகிறது. அந்தவகையில், 11-வது பாராளுமன்ற உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.
Advertisment
நடிகர் சூர்யா - ஜோதிகாவுக்கு விருது
இதில், ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021-ம் ஆண்டின் மதிப்புமிக்க (உயரிய) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை கதையை மையமாக கொண்டு சமூக நீதியை முன்னிறுத்தி வெளியிடப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குனர் டி.ஜே.ஞானவேல்ராஜா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினர் நேரடியாக வந்து விருதுகளை பெற்றுச்செல்லுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின்
இதேபோல, ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021' (இன்டர்நேஷனல் எமர்ஜிங் ஸ்டார் 2021) என்ற பிரிவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது. உலகெங்கிலும் வளர்ந்து வரும் தலைவரால் செய்யப்பட்ட சிறந்த பணியை அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.
உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 19-ந் தேதியன்று இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“