அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்று கடந்த சில மாதங்களாக செய்திகள் உலா வந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 28) தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதாகவும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலவர் பதவி அளிக்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தி.மு.க-வின் இளைஞரணி செயலாளரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 29) துணை முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, சா.மு. நாசர், ஆர். ராஜேந்திரன், கோவி. செழியன் பதவி ஏற்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, புழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த நிலையில் அவர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல, சில மாதங்களுக்கு முன்பு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட சா.மு. நாசர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில், திருவிடை மருதூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கோவி செழியனுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
அதே போல, சேலம் வடக்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ஆர். ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனுக்கு பால்வளத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிக்காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சர்களாக ஆர். ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, சா.மு. நாசர், கோவி செழியன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவியேற்றுக்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஆர். ராஜேந்திரன், கோவி செழியன், சா.மு. நாசர் ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தனர்.
தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே. ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவியேற்றதைத் தொடந்து, தமிழக அரசின் இணையதளத்தில் அமைச்சரவையின் முழுமையான பட்டியல் வெளியாகி உள்ளது.
அமைச்சர்கள் பட்டியல்:
1 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இலாக்காக்கள்: பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வனப் பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன்.
2 நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
இலாக்காக்கள்: சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்திட்டங்கள், சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுசீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.
3 நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு
இலாக்காக்கள்: நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல்
4 ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி
ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள்
5 அமைச்சர் க. பொன்முடி
இலாக்காக்கள்: தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்
6 பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு
இலாக்கா: பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)
7 வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
இலக்காக்கள்: வேளாண்மை, வேளாண்மைபொறியியல், வேளாண்பணிக்கூட்டுறவுசங்கங்கள், தோட்டக்கலை, சர்க்கரை, கரும்புத்தீர்வை, கரும்புப்பயிர் மேம்பாடு மற்றும் தரிசுநில மேம்பாடு.
8 வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
வருவாய், மாவட்ட வருவாய் பணியமைப்பு, துணைஆட்சியர்கள், பேரிடர்மேலாண்மை
9 நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு
இலாக்காக்க: நிதித்துறை, திட்டம், மனிதவள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள் மற்றும் புள்ளியியல், தொல்லியல் துறை,
10 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இலாக்காக்கள்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள்
11 சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி
இலாக்காக்கள்: சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்டம்.
12 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி
இலாக்காக்கள்: வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத்திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இட வசதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல் மற்றும் நகர்பகுதி வளர்ச்சி, கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்)
13 கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன்
இலாக்கா: கூட்டுறவுத் துறை
14 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன்
இலாக்காக்கள்: குடிசைத்தொழில்கள், சிறுதொழில்கள் உள்ளிட்ட ஊரகத்தொழில்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
15 தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
மு. பெ. சாமிநாதன்
இலாக்காக்கள்: தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.
16 சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
பி. கீதாஜீவன்
இலாக்காக்கள்: மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்
17 மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
இலாக்காக்கள்: மீன்வளம், மீன்வளர்ச்சிக் கழகம் மற்றும் கால்நடை பராமரிப்பு
18 பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்
ஆவின் பால் வளத்துறை
19 சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன்
சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.
20 சுற்றுலாத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி
இலாக்காக்கள்: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர்பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு.
21 கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்
ஆர். காந்தி
இலாக்காக்கள்: கைத்தறி மற்றும் துணிநூல், பூதானம் மற்றும் கிராமதானம்
22 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன்
இலாக்காக்கள்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு
23 வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி
இலாக்காக்கள்: வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.
24 போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்
இலாக்காக்கள்: போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்
25 இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
பி.கே. சேகர்பாபு
இலாக்காக்கள்: இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
26 தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாக ராஜன்
இலாக்காக்கள்: தகவல் தொழில் நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள்
27 சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர்
இலாக்காக்கள்: சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம்.
28 பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
இலாக்கா: பள்ளிக் கல்வி
29 சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன்
இலாக்காக்கள்: சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள்
30 தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன்
இலாக்காக்கள்: தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கட் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு.
31 பால்வளத்துறைஅமைச்சர் ராஜ கண்ணப்பன்
இலாக்கா: பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி.
32 தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி .ஆர் .பி . ராஜா
இலாக்கா: தொழில்கள்
33. ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர். மா. மதிவேந்தன்
இலாக்காக்கள்: ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்
34 வனத்துறை அமைச்சர் என். கயல்விழிசெல்வராஜ்
இலாக்கா: வனம்
35 உயர்கல்வித் துறை கோவி செழியன்
இலாக்கா: உயர்கல்வி
36 மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
இலாக்கா: மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.