நமது முதலமைச்சர் ஒரு மிகச்சிறந்த லெக் ஸ்பின் பெளலர் என சட்டப்பேரவையில் கிரிக்கெட் அனுபவங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (ஏப்ரல் 11) விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
இதையும் படியுங்கள்: ‘சி.எஸ்.கே அணியை தடை பண்ணுங்க’: தமிழக சட்டசபையில் திடீர் கோரிக்கை
அப்போது பேசிய அவர், “நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரம், கலைஞருடைய இல்லம். அதன்பின்னர் எனது தந்தையார் சென்னை மேயர் ஆன பிறகு வேளச்சேரிக்கு குடிபெயர்ந்தோம். நான் சிறு வயதில் இருந்தப்போது, கோபாலபுரம் வீட்டில், அருகில் உள்ள சாலையில், தற்போதைய பள்ளி கல்வி அமைச்சர் (அன்பில் மகேஷ்) உடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம்.
கலைஞருடனும் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். வருவாரு பால் போட்டு போயிடுவாரு, இல்லனா பேட் புடிச்சிட்டு போயிடுவாரு. கலைஞருடன் மட்டும் அல்ல, நம்முடைய முதலமைச்சர் (ஸ்டாலின்) உடனும் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். அவர் மிகச் சிறந்த லெக் ஸ்பின் பெளலர். அவர் பவுலிங் போட்டால், யாராலும் விளையாட முடியாது. சட்டப்பேரவையில் எப்படி சிக்சர் அடிக்கிறாரோ, பவுலிங்கிலும் அப்படித் தான்” என்று கூறினார். இதைக்கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சந்தோஷமாகச் சிரித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil