“வேலுமணி உள்ளே செல்வது உறுதி” – அதிமுக கோட்டையில் அதிரடி காட்டிய உதயநிதி ஸ்டாலின்

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பணபலமும் நம்முடைய கட்சியின் தோல்விக்கு மற்றொரு காரணம் என்று கூறிய அவர், வர இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் திமுகவினர் கடுமையாக உழைத்து 100% வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Udhayanidhi Stalin talks about SP Velumani arrest in Coimbatore
உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin talks about SP Velumani arrest in Coimbatore: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் திமுக பலமற்று இருக்கும் கோவையில் வெற்றிக்கான சாத்தியக் கூறுகளை அக்கட்சி ஆய்வு செய்து வருகிறது. திமுக நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சனிக்கிழமை மாலை கோவை வந்தார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். ஞாயிறு அன்று நடைபெற்ற பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக தொண்டர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான் கோவையில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோல்வியுற்றார்கள் என்று கூறினார்.

கோவையில் 100 வார்டுகளிலும் பொறுப்பாளர்களாக கரூர் நிர்வாகிகள்: செந்தில் பாலாஜி மாஸ்டர் பிளான்

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்கள் மத்தியில் இருந்த வரவேற்பை என்னால் காண முடிந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளோ நமக்கு சாதகமாக அமையவில்லை என்றும் கூறினார். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பணபலமும் நம்முடைய கட்சியின் தோல்விக்கு மற்றொரு காரணம் என்று கூறிய அவர், வர இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் திமுகவினர் கடுமையாக உழைத்து 100% வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Udhayanidhi Stalin talks about SP Velumani arrest in Coimbatore
கோவையில் உதயநிதி ஸ்டாலின் (Credits @UdhayStalin Twitter Handle)

பொள்ளாட்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வரதராஜனும் நம்முடைய தொண்டர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. அவர்களை அடையாளம் கண்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த தொண்டர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறிய உதயநிதி, வேலுமணி மீதும் கட்சி தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் கூறியது போன்றே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குமுன் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் – சசிகலா சிக்கல்களைத் தீர்க்குமா அதிமுக?

பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பால் விலை குறைவு போன்ற கடந்த 8 மாத கால அரசின் நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது பூத் கமிட்டி உறுப்பினர்களின் பணி என்றார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும், மேயர் , மற்றும் துணை மேயர் பதவிகள், ஏழு முனிசிபாலிட்டி மற்றும் அனைத்து டவுன் பஞ்சாயத்துகளிலும் திமுக வெற்றி பெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் அவர் கூறினார்.

ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினர்களும் குறைந்தபட்சம் 10 குடும்பத்தினை நேரில் சந்தித்து அரசின் சாதனைகள் பற்றி பேச வேண்டும். அந்த குடும்ப உறுப்பினர்களை திமுகவில் இணைக்கவும் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Udhayanidhi stalin talks about sp velumani arrest in coimbatore booth committee members meeting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com