விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு திமுக வாழ்த்து கூறுவதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது மாற்று கட்சியினரால் விமர்சனம் வைக்கப்படும்.
கடவுள் மறுப்பு கொள்கை என்று திமுக பேசிக்கொண்டாலும், இந்துக்களின் பண்டிகைகள், பழக்க வழக்கங்களை அவ்வப்போது கிண்டல் செய்வதாக விமர்சனம் வைக்கப்படுவதுண்டு.
இந்த சூழலில், எருக்கம்பூ மாலையுடன் களிமண்ணாலான விநாயகர் சிலையை ஒருவர் வைத்திருப்பது போன்ற படத்தை, நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அந்த விநாயகர் சிலையை வைத்திருப்பது யார், எதற்காக இந்த பதிவு போன்ற தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை. கேப்ஷனும் இடவில்லை. இதுவே, கண், காது, மூக்கு வைத்து பேச வித்திட, சமூக தளங்களில் திமுக எதிர்ப்பாளர்கள் சரமாரியாக ட்வீட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
இப்படியாக டீவீட்டியன்கள் ட்வீட் செய்து கொண்டிருக்க, தேவையில்லாத_ஆணி_உதய் எனும் ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,'சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே'
என்று இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் உதயநிதி.