Advertisment

கருணாநிதிக்கு 10 ஆண்டு; ஸ்டாலினுக்கு 17 ஆண்டு; உதயநிதிக்கு 19 மாதங்கள்!

மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்துதான் அமைச்சராக பொறுப்பேற்றார். அவரது மகனான உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆன 19 மாதங்களில் அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

author-image
WebDesk
New Update
Sweet Pongal will be served in school halls on Karunanidhis birthday

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதி பிறந்தநாளில் பள்ளிக் கூடங்களில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து உதயநிதி ஸ்டாலின் தேர்வானார்.
இந்நிலயில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

Advertisment

இதற்கிடையில் அவர் நாளை (புதன்கிழமை, டிச.14) அமைச்சராக பதவியேற்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 1957ல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவருக்கு 10 ஆண்டுகள் கழித்து அமைச்சர் பதவி கிடைத்தது.

அடுத்து அவரின் மகனும், தற்போதைய முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு 17 ஆண்டுகள் கழித்து அமைச்சர் பதவி கிடைத்தது.
ஆனால் அவரின் மகனும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏமான உதயநிதி ஸ்டாலினுக்கு 19 மாதங்களில் அமைச்சர் பதவி கிடைக்கவுள்ளது. இதனை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment