மதுரைக்கு வரும் உதயநிதி; துணை முதல்வரான பின் முதல் நிகழ்ச்சி; உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க முடிவு

மதுரைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள வரும் உதயநிதி; துணை முதல்வரான பின் கலந்துக் கொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் உற்சாக வரவேற்பு அளிக்க மதுரை மாவட்ட தி.மு.க.,வினர் முடிவு

author-image
WebDesk
New Update
Udhayanidhi Madurai visit

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மதுரை வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisment

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு வாழ்த்துகளை பெற்று வரும் நிலையில், இன்று மாலை 7 மணிக்கு மதுரை வருகிறார். அவருக்கு தி.மு.க.வினர் மட்டுமின்றி பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரவேற்கவுள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி நான்கு வருடங்களுக்குள் அமைச்சர், துணை முதலமைச்சர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்றதற்கு பலரும் வாழ்த்துகள் கூறி வந்தாலும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

தி.மு.க.வில் பல ஆண்டுகளாக உழைத்து மு.க.ஸ்டாலின் அடைந்த இடத்தை உதயநிதி ஸ்டாலின் நான்கு ஆண்டுகளுக்குள் அடைந்து விட்டார் என்று அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதை விமர்சித்து வருகின்றனர். 

Advertisment
Advertisements

இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை மதுரை வருகிறார். தொடர்ந்து நாளை மதுரை, விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சராகி முதல் முறையாக மதுரை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு மதுரை மாவட்ட தி.மு.க சார்பில் மதுரை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர். மதுரை மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி, மு.மணிமாறன் ஆகியோர் ஒரு அறிக்கையில், “கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக இன்று 30 ஆம் தேதி மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வருவதையொட்டி, மதுரை விமான நிலையத்தில் மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதை கழகத்தினரும், பொதுமக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில், மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று இரவு 7.15 மணியளவில் விமான மூலம் மதுரை வருகிறார். அவருக்கு மதுரை மாவட்ட தி.மு.க சார்பில் அனைவரும் ஒன்று திரண்டு முரசு கொட்டு முழங்க பிரமாண்ட வரவேற்பு கொடுக்க உள்ளது. எனவே கழகத்தினர் திரளாக பங்கேற்று, கையில் இரு வண்ண கொடியேந்தி வரலாறு காணாத வகையில் பிரமாண்ட வரவேற்பு கொடுத்திட வேண்டும்”என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் மதுரையில் தி.மு.க., நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி அரசியலில் விஸ்வரூப பயணத்தை தொடங்க உள்ளார். ஆகையால் மதுரை பயணம் அவரை கவரும் விதத்தில் அமையவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, முன்னாள் மத்திய இணை அமைச்சருமான மு.க.அழகிரியின் இல்லத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே அமைச்சராக பதவியேற்ற போது அழகிரி இல்லம் சென்று வந்தார், என்பது குறிப்பிடத்தக்கது. துணை முதல்வராக பதவியேற்று முதல்முறையாக மதுரை வரும் உதயநிதி ஸ்டாலின் வருகையால் மதுரை களைகட்டும் என கட்சி வட்டாரங்கள் பேசிகொள்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk Udhayanidhi Stalin Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: