/indian-express-tamil/media/media_files/GO6Wrw3yfhS4SaCQTWYe.jpg)
தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Udhayanidhi Stalin: தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். ஆளும் தி.மு.க கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் இருந்து வரும் அவர், நாடாளுமன்ற தேர்தலின் போது 24 நாட்கள் பிரசாரம் செய்திருந்தார். தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்த அவர் 8,465 கிலோ மீட்டர் பயணம் செய்து 122 பிரசார முனைகளில் 3,726 நிமிடங்கள் பேசினார்.
ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற வாக்குப் பதிவின் போது, தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவி கிருத்திகாவுடன் வந்து வாக்களித்தார். இந்நிலையில், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார். ஓய்வுக்காக லண்டன் சென்றுள்ளதால் அவரது பயண நிகழ்ச்சிகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் வருகிற 10 ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விமான இருக்கையில் அமர்ந்தவாறு எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மகள் தன்மயாவுடன் சிரித்தவாறு போஸ் கொடுக்கிறார். புகைப்படத்தின் கேப்சனில் ரியல் ரவுடி என்று அவர் பதிவிட்டுள்ளார்.
REAL ROWDY❤️ pic.twitter.com/iE1L50lxgP
— Udhay (@Udhaystalin) April 30, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us