New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-22T150821.164.jpg)
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கோவிட் நேரத்தில் பணம் வழங்கப்பட்டதுபோல் இப்போதும் சரியாக வழங்கப்படும். நிவாரண உதவியை பொறுத்தமட்டில் அனைவருக்கும் சரியான நேரத்தில் சென்றடையும். அதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் பின்னர் சரிசெய்யப்படும்.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து, காரில் அமர்ந்தபடி அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சென்னையில் ரேஷன் அட்டை இல்லாத நபர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட மாட்டாதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “கோவிட் நேரத்தில் பணம் வழங்கப்பட்டதுபோல் இப்போதும் சரியாக வழங்கப்படும். நிவாரண உதவியை பொறுத்தமட்டில் அனைவருக்கும் சரியான நேரத்தில் சென்றடையும். அதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் பின்னர் சரிசெய்யப்படும்” என்றார்.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் ரேஷன் அட்டை உள்ள நபர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறினார்.
இந்த நிலையில் மற்றொரு அமைச்சர் உதயநிதி கரோனா காலத்தில் நிதி உதவி அளித்த முறை பின்பற்றப்படும் எனக் கூறியுள்ளார்.
புயல் நிவாரண உதவி வழங்க டோக்கன்கள் ரேஷன் கடைகளில் டிச.16ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இந்த முறைக்கு ஆட்சேபம் தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு தேவையில்லாத பணிச்சூழல் அதிகரிக்கும். இந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தலாம்” எனக் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.