Advertisment

சினிமாவுக்கு 'பை பை'… உதயநிதி இனி முழு நேர அரசியல்வாதி!

தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி புதன்கிழமை அமைச்சராக பதவியேற்கிறார். இதனால், உதயநிதி சினிமாவுக்கு ‘பை பை’ சொல்லி முழுக்கு போட்டுவிட்டு இனி முழு நேர அரசியல்வாதியாகிறார்.

author-image
WebDesk
New Update
Tamil News Update:அமைச்சராக உதயநிதி இன்று பதவியேற்பு

தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி புதன்கிழமை அமைச்சராக பதவியேற்கிறார். இதனால், உதயநிதி சினிமாவுக்கு ‘பை பை’ சொல்லி முழுக்கு போட்டுவிட்டு இனி முழு நேர அரசியல்வாதியாகிறார்.

Advertisment

தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி புதன்கிழமை (டிசம்பர் 14) அமைச்சராக பதவி ஏற்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் டிசம்பர் 14ம் தேதி காலை 9.30 மணிக்கு அமைச்சர் பதவி ஏற்கும் உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தலைமைச் செயலகம் வரும் உதயநிதி ஸ்டாலின் தனது துறையின் பொறுப்புகளை ஏற்க உள்ளார். அவருக்கு இளைஞர் நலம்- சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை கோட்டையில் 2-வது மாடியில் பெரிய அறை தயாராக இருக்கிறது.

குறுகிய காலத்தில் அரசியலில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளதை அறிந்து கட்சியினர் வரவேற்று வருகின்றனர்.

கலைஞர் கருணாநிதியின் பேரனும் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சென்னை லயோலா கல்லூரியில் பி.காம். படித்தவர். இவரது மனைவி கிருத்திகா. இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் உள்ளனர். இன்பநிதி தற்போது வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

2006-2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் திரையுலக தயாரிப்பாளராக பொதுவெளியில் தோன்றினார். 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஜெயண்ட் மூவிஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் விக்ரம், டான், லவ் டுடே ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டுள்ளார்.

அதே நேரத்தில், உதயநிதி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள மாமன்ன படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

உதயநிதி, சினிமா தயாரிப்பாளர், சினிமா நடிகர் என்று பரிணாமம் அடைந்த உதயநிதி அரசியல்வாதியாக மாறினார். தி.மு.க இளைஞரணி செயலாளராகவும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வாகவும் உள்ள உதயநிதி புதன்கிழமை அமைச்சராகப் பதவியேற்கிறார்.

இதனால், உதயநிதி சினிமாவுக்கு 'பை பை' சொல்லிவிட்டு இனி முழு நேர அரசியல்வாதிகிறார். உதயநிதி புதிதாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை. எனினும் ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனத்தை அவரது நண்பர்கள் தொடர்ந்து நடத்துவார்கள் என தெரிகிறது.

கடந்த நவம்பர் மாதம் தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடிய உதயநிதி அமைச்சாகி, இளம் வயது அமைச்சர்களின் வரிசையில் இடம்பிடிக்கிறார். தற்போது அமைச்சரவையில் மதிவேந்தன், அன்பில் மகேஷ் ஆகியோர் 45 வயதுக்கு குறைவான இளம் வயது அமைச்சர்களாக உள்ளனர். அந்த வரிசையில் இப்போது உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment