திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 2 நாட்களாக கனமழை கொடித் தீர்த்து வருகிறது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சலைகளில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லையில், பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளன. கடந்த வாரம் பெய்த மழையில் மூழ்கிய சென்னையைப் போல, தற்போது நெல்லையும் மூழ்கியுள்ளது.
தமிழக அரசு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சிர்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்து துரிதப்படுத்தி வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் மீட்பு பணியில் 3 கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டரை களமிறக்கியுள்ளது கடலோர காவல் படை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஹெலிகாப்டர் பறப்பதற்கான சாதகமான சூழல் இன்னும் அமையவில்லை என்று கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு அங்கே மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர் உதயநிதி செல்லும் வழியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து, அங்குள்ள மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், “விருதுநகர் மாவட்டத்திலும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டதாக” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் சென்று பாளையங்கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
நெல்லை மாவட்டத்தில் அதிக கன மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறுகிற மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு தரப்பில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அப்பணிகளை ஆய்வு செய்வதற்காக நெல்லை வருகை தந்துள்ளோம்.
— Udhay (@Udhaystalin) December 18, 2023
நெல்லை பாளையங்கோட்டையில் வெள்ளம் ஏற்பட்ட சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த… pic.twitter.com/LJw0xHlQME
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “நெல்லை மாவட்டத்தில் அதிக கன மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறுகிற மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு தரப்பில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அப்பணிகளை ஆய்வு செய்வதற்காக நெல்லை வருகை தந்துள்ளோம்.
நெல்லை பாளையங்கோட்டையில் வெள்ளம் ஏற்பட்ட சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள பெல் உயர் நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி, இப்பேரிடர் நேரத்தில் துணை நிற்போம் என்று எடுத்துக்கூறினோம்.” என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் அதிக கன மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறுகிற மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு தரப்பில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அப்பணிகளை ஆய்வு செய்வதற்காக நெல்லை வருகை தந்துள்ளோம்.
— Udhay (@Udhaystalin) December 18, 2023
நெல்லை பாளையங்கோட்டையில் வெள்ளம் ஏற்பட்ட சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த… pic.twitter.com/LJw0xHlQME
இதனால், பாதிக்கப்பட்டுள்ள நெல்லை வண்ணாரப்பேட்டை மணிமூர்த்தி நகர் மக்கள், தச்சநல்லூரில் இருக்கும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினோம். மேலும், முழுதாக இயல்புநிலை திரும்பும் வரை களத்தில் மக்களுக்கான உதவிகளை செய்வோம் என்று எடுத்துக்கூறினோம்.” என்று என்று பதிவிட்டுள்ளார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இருந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த அதிக கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ள நிலையில் அதன் பாதிப்பை நேரில் ஆய்வு செய்தோம்.
— Udhay (@Udhaystalin) December 18, 2023
அங்கு தேங்கியுள்ள தண்ணீரை… pic.twitter.com/ORwO1R8EUc
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த அதிக கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ள நிலையில் அதன் பாதிப்பை நேரில் ஆய்வு செய்தோம்.
அங்கு தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், கடைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகள் - அலுவலர்களை கேட்டுக்கொண்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.