Advertisment

ஸ்டாலினுடன் திருச்சிக்கு கூடவே வந்த உதயநிதி: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கினார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்கா, கீழபுலிவார்டு ரோடு லாரி டெர்மினல் உள்ளிட்ட 5,639 முடிவுற்ற திட்டப்பணிகளை வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

author-image
WebDesk
New Update
Stalin visits Trichy, Stalin tricy visits, Udhayanidhi along with MK Stalin, MK Stalin, திருச்சி, ஸ்டாலின் திருச்சி வருகை, ஸ்டாலின் உடன் உதயநிதி, திருச்சி செய்திகள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும் வருகிறார்.

Advertisment

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று 3 இடங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வந்தார்.
அவருடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வந்தார்.

விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

இதையடுத்து, முதல் நிகழ்வாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வரவேற்றார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்கா, கீழபுலிவார்டு ரோடு லாரி டெர்மினல் உள்ளிட்ட 5,639 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

மேலும், ரூ.308 கோடி மதிப்பீட்டிலான 5,951 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ரூ.79 கோடி மதிப்பீட்டில் 22,716 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 42,081 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,548.04 கோடி வங்கிக்கடன் இணைப்பு மற்றும் இதர பயன்கள் வழங்கப்பட்டன. இதில் திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் 2,764 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 54,654 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.78 கோடி வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் இதர பயன்களை வழங்கினார்.

மேலும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகளையும் வழங்கினார்.

விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதி மற்றும் கடனுதவிகளை வழங்கினார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment