பூமி பூஜையில் செருப்பு அணிந்து நின்ற உதயநிதி: புதிய சர்ச்சை

Udhayanithi Tamil News : செருப்பு அணிந்து பூமி பூஜையில் கலந்துகொண்ட திமுக எம்எல்ஏ உதயநிதிக்கு கண்டனம் வலுக்கிறது.

Udhayanithi Stalin In Boomi Poja : சென்னையில் குடிசை மாற்று வாரியம் சார்பில்  அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க நடத்தப்பட்ட பூமி பூஜையில்  எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் செருப்பு காலுடன் கலந்துகொண்ட நிகழ்க்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய திமுக இளைஞரணி செயலாளரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக கட்சி நிகழ்ச்சி மற்றும் அரசு விழாக்களில் அவர் தவறால் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில், சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு அமைப்பதற்கு கட்டுமானப்பணிகள் இன்று தொடங்கியது. இதற்காக நடைபெற்ற பூமி பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர்  உதயநதி ஸ்டாலின் செருப்பு அணிந்து பூமி பூஜையில் கலந்துகொண்ட நிகழ்வுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் ராம ரவிக்குமார் தனது ட்விட்டர் பதிவில், திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் காலில் செருப்பு அணிந்து கொண்டு மரியாதை செலுத்துவார் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்? தேர்தலுக்கு முன்பு நாத்திக வேடம் ஆட்சிக்கு வந்தபின் நாத்திக ஆத்திக வேடம்!? வாழ்க பகுத்தறிவு?? ஹிந்து மத அவமதிப்பு மன்னிப்பு கேட்கணும்! என பதிவிட்டுள்ளார்.

அனைத்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் ராஜேஸ்வரி பிரியா தனது ட்விட்டர் பதிவில், தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் பூமி பூஜை நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்கலாம்‌. ஆனால் கடவுளை அவமதிப்பது போல காலில் செருப்பு அணிந்து கொண்டு பூஜை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். என பதிவிட்டுள்ளார்.

பாஜகவை சேர்த்த நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிப்பதை தொழிலாக கொள்வதில் தவறில்லை. ஆனால், பொது வாழ்க்கையில் நடிப்பது குற்றம். நாத்திகராய் இருப்பது தவறில்லை. அவரவர் விருப்பம். ஆனால் பக்தர்களின் மனதை புண்படுத்துவது குற்றம். குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னை வியாசர்பாடியில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட நடிகரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி அவர்கள் செருப்பை அணிந்து கொண்டே பூமி பூஜையில் பங்கேற்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செய்வதை திருந்த செய்ய வேண்டும். இல்லையேல் செய்யாதிருக்க வேண்டும். ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த @mkstalin அவர்கள் முன்வருவாரா? என பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Udhayanidhi who attended the bhoomi puja wearing sandals

Next Story
ரூ1000 உதவி: ரேஷன் கார்டில் குடும்பத்தலைவி படம் கட்டாயமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com