nallakannu | udhayanidhi-stalin | முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு இன்று தனது 99வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் வலைதளத்தில், “99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் #நல்லகண்ணு அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!
ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு அவர்கள், நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
“விடுதலைப் போராட்டத் தியாகியும் - முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவருமான ‘தகைசால் தமிழர்’ அய்யா நல்லகண்ணு அவர்களின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை நேரில் இன்று வாழ்த்தினோம்” என உதயநிதி ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தமிழக அமைச்சர் ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “விடுதலைப் போராட்டத் தியாகியும் - முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவருமான ‘தகைசால் தமிழர்’ அய்யா நல்லகண்ணு அவர்களின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை நேரில் இன்று வாழ்த்தினோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாம் வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணங்கள் - முதற்கட்ட இழப்பீடுகளை வழங்கி வந்துள்ள நிலையில், அங்குள்ள கள நிலவரங்களை அய்யா அவர்கள் அக்கறையுடன் கேட்டறிந்தார்கள். அங்கு, இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க கழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விளக்கிக் கூறினோம்.
போராட்டக் குணம், எளிமை, ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதி என இளையத் தலைமுறைக்கு வழிகாட்டும் பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான அய்யா நல்லகண்ணு அவர்கள் நூற்றாண்டையும் கடந்து மேலும் பல்லாண்டுகள் நமக்கெல்லாம் வழிகாட்டட்டும்.
அய்யா அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.