/indian-express-tamil/media/media_files/2024/10/27/Ll1mPnfQuPH3Dibhkqhe.jpg)
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக மாநாடு, இன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி. சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உற்சாகமாக வருகை தந்தபடி உள்ளனர்.
மேலும், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் வாழ்த்துகளை நடிகர் விஜய்க்கு தெரிவித்துள்ளனர். குறிப்பாக நெல்லையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற நடிகர் பிரபு, தனது முழு ஆதரவும், தனது தந்தையின் ஆசியும் விஜய்க்கு எப்போதும் இருக்கும் எனவும், தைரியமாக களமிறங்கியிருக்கும் விஜய்க்கு கடவுளின் ஆசீர்வாதமும் இருக்கும் என தெரிவித்தார்.
இதேபோல், நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். சினிமாவில் காண்பித்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை அரசியலிலும் காட்டுவதற்கு வாழ்த்துகள் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ”இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் தளபக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
”தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க, தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கு வாழ்த்துகள்” என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.