Advertisment

"அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைவு": உதயநிதி ஸ்டாலின் தகவல்

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஃபீஞ்சல் புயலின் பாதிப்புகள் குறைவாக இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Udhayanithi Pressmeet+

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழையின் பாதிப்பு குறைவாக இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மழை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

அதன்படி, "12 இடங்களில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகிறது. மழை நீரை வெளியேற்றுவதற்காக 1700 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் பயன்பாட்டில் உள்ளது.

மதியம் ஒரு மணி வரை வீசிய அதி வேக காற்றின் காரணமாக 27 மரங்கள் விழுந்துள்ளன. அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. 500 மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஹைட்ராலிக் இயந்திரங்கள் உள்ளிட்டவை  தயார் நிலையில் உள்ளது.

சென்னையில் உள்ள 22 சுரங்க பாதைகளில், கணேசபுரம் சுரங்கபாதையில் ரயில்வே பணிகள் நடைபெறுகிறது. அங்கு தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுரங்க பாதைகளில் 6 இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, நீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக 329 நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகிறது. உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 120 சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.

இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 193 பேர் அழைத்து வரப்பட்டு, 8 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை உணவு 8500 பேருக்கும், மதிய உணவு 2 லட்சத்து 23 ஆயிரத்து 700 பேருக்கும், மொத்தமாக 2 லட்சத்து 32 ஆயிரத்து 200 பேருக்கும் உணவு வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள 386 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் மழை வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ள களப்பணியில் ஈடுபட தன்னார்வளர்களும் ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர்.  

கழிவுநீர், பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்டவைகள் சீரமைக்கும் பணியில் சென்னை குடிநீர் வாரியம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக 524 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. முதலமைச்சர் தலைமையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட மீட்பு குழுக்கள் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி பகுதியில் மண்டல அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர் பணியில் உள்ளனர்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்கள பணியாளர்கள் மட்டுமின்றி கழக செயல் வீரர்களும் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை.

புயல் இன்னும் கரையை கடக்காத நிலையில், எந்த விதமான சூழலையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பொதுமக்கள் அச்சமும், பதற்றமும் அடைய தேவையில்லை. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு முன்னெடுத்துள்ளது. தேவையில்லாமல் வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

ஃபீஞ்சல் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறோம். கடந்த காலங்களில் இயற்கை சீற்றங்களின் போது ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டு வந்திருக்கிறோம். இப்போதும் அதேபோன்று செயல்பட்டு மீண்டு வருவோம்.

தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சுமார் 30 நிமிடங்கள் மழை நின்றால் கூட தேங்கியுள்ள நீர் வடிந்து விடும். நீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதனை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு மழை பெய்தும் பாதிப்புகள் குறைவு தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Weather Report Udhayanithi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment