New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/18/fC95kkPe7ytaVklnMgSU.jpg)
சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திடீரென தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
Advertisment
அப்போது விடுதியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதனை கண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களோடு சகஜமாக கலந்துரையாடி, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். பின்னர், மாணவர்களுடன் சேர்ந்து தானும் மதிய உணவு சாப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, விடுதியில் உள்ள கழிப்பறை, குளியலறை, உணவுக் கூடம் ஆகிய வசதிகளையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இறுதியாக, மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.