சென்னை வந்துள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (மார்ச் 18) சந்தித்து பேசினார். விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அனுராக் சிங் தாகூர் சென்னை வந்துள்ளார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அனுராக் சிங் தாகூரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
அப்போது, Sports Authority of India என்று அழைக்கப்படும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தென் இந்திய கிளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும், கேலோ இந்தியா உள்கட்டமைப்பு நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும், தமிழ்நாட்டில் ஏசியன் பீச் கேம்ஸ் விளையாட்டுகளை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உதயநிதி ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சென்னைக்கு வருகை தந்துள்ள ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் @ianuragthakurஅவர்களை அன்போடு வரவேற்றோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி கூறினோம்.
SportsAuthorityofIndia - வின் தென்னிந்தியக் கிளை தமிழ்நாட்டில் வேண்டும் - #KheloIndia உள்கட்டமைப்பு நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் - தமிழ்நாட்டில் #NationalYouthFest2024 #Asianbeachgames ஆகியவற்றை நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். #AtulyaMisra @jmeghanathreddy" என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/