திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட்ட, சேனல் விஷன் என்ற யூ டியூப் சேனலின் மதன் ரவிச்சந்திரன் மீது, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மனுவில்,"அடிப்படை ஆதாரமற்ற, அவதூறு செய்திகள் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில்சேனல் விஷன் சேனலில் இரண்டு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தன்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு செய்தி பரப்பும் மதன் ரவிச்சந்திரன் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 500 கீழ் விசாரித்து, உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மான்கறி vs உதயநிதி ஸ்டாலின்/ திருப்போரூர் துப்பாக்கி சூடு என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோவை உதயநிதி ஸ்டாலின் தனது மனுவில் குறிபிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நியூஸ் 18.காம் நிறுவனத்தின் அசோசியேட் எக்ஸிகியூட் எடிட்டர் வினய் சரவாகி அனுப்பியது போன்று போலி மின்னஞ்சலை உருவாக்கி பரப்பியதற்காக பெயரிடப்படாத நபர்களுக்கு எதிராக மோசடி, நற்பெயருக்கு சேதம் மற்றும் ஐ.டி சட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளில் யூடியூபர் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் கிளை வழக்கு பதிவு செய்தது.
கறுப்பர் கூட்டம், கிஷோர்.கே சாமி, மதன் ரவிச்சந்திரன் ஆகிய யுடுயூப் சேனல் பதிவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil