தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் சூடுபிடித்துள்ளது. தற்போது உள்ள தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் நீண்ட காலமாக வகித்துவரும் தங்களுடைய மாவட்டச் செயலாளர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில், புதிய முகங்கள் தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியில் இறங்கியுள்ளனர். தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், மாவட்டச் செயலாளரர் பதவிக்கு தனது இளைஞர் அணியில் இருந்து சிலரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளதாக தி.முக. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின், தி.மு.க.-வில் புதிய மாவட்டச் செயலாளர் பதவிக்கு தனது ஆதரவாளர்கள் மூன்று பேர் பெயரை பரிந்துரை செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடியைச் சேர்ந்த மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல், செங்கல்பட்டு மாவட்ட இளைஞர் அணிப் பொறுப்பாளர் அப்துல் மாலிக், ராணிப்பேட்டை ஈஸ்வரப்பன், கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன், ஈரோட்டைச் சேர்ந்த பிரகாஷ், சென்னையைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் ஆகியோரின் பெயர்களை தி.முக மாவட்டச் செயலாளர் தேர்தலில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தி.மு.க-வில் மற்றொரு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தி.மு.க.-வில் உள்ள உயர் மட்டத் தலைவர்களின் செல்வாக்கு காரணமாக உதயநிதி ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ள அனைவருடைய பெயர்களும் பரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கின்றனர்.
உதயநிதி பரிந்துரை செய்துள்ள பெயர்களில், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பதவிகளில் இளம் ரத்தத்தைப் பாய்ச்சவும் தொண்டர்களிடையே ஆர்வத்தை அதிகரிப்பதற்காகவும் ஒன்று அல்லது இரண்டு பெயர்களை தி.மு.க தலைமை பரிசீலிக்கலாம். ஆனால், அந்தந்த மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய மாவட்டச் செயலாளர்களை கோபப்படுத்தும்படியாக இந்த நடவடிக்கை இருக்காது என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் பதவிக்கு உயர்த்துவது என்பது முதன்முதலாக உதயநிதியால் முன்னெடுக்கப்பட்ட யோசனை அல்ல. கடந்த முறை நாமக்கல்லைச் சேர்ந்த ராஜேஷ்குமாரையும், சென்னையைச் சேர்ந்த என். சிற்றரசுவையும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு உயர்த்தி உதயநிதியே இதைச் செய்திருக்கிறார்.
மு.க. ஸ்டாலின் தனது தந்தை மு.கருணாநிதி கட்சித் தலைவராக இருந்தபோது தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளான மா.சுப்பிரமணியன், பனமரத்துப்பட்டி எம்.எல்.ஏ ராஜேந்திரன் (சேலம்) மற்றும் செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோரை மாவட்டப் பொறுப்பாளராக்கினார். அதே போல, உதயநிதியும் தற்போது தனது தந்தை மு.க.ஸ்டாலினை பின்பற்றுகிறார்.
உதயநிதி ஸ்டாலின், தி.மு.க.-வில் புதிய மாவட்டச் செயலாளர் பதவிக்கு தனது ஆதரவாளர்கள் மூன்று பேர் பெயரை பரிந்துரை செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடியைச் சேர்ந்த மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல், செங்கல்பட்டு மாவட்ட இளைஞர் அணிப் பொறுப்பாளர் அப்துல் மாலிக், ராணிப்பேட்டை ஈஸ்வரப்பன் ஆகியோரின் பெயர்களை உதயநிதி பரிந்துரை செய்துள்ளதாகத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவிக்கு உதயநிதி பரிந்துரை செய்த பெயர்களில் ஒன்று அல்லது இரண்டு பேர்களின் பெயர்கள் மட்டுமே தி.மு.க தலைமை பரிசீலனை செய்யும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"