கவுசல்யா சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட சக்தி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வெளியான நிலையில், இதுக் குறித்து கவுசல்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
கவுசல்யா – சக்தி:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இதை ஏற்க மறுத்த கவுசல்யா குடும்பத்தார் கூலிப்படையை ஏவியதில் கடந்த 2015-ம் ஆண்டு சங்கர் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.
மேலும், அந்த கும்பல் கவுசல்யா மீதும் தாக்குதல் நடத்தியது. இதில் அவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.சங்கர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.ஒன்றே முக்கால் ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
சங்கரின் மரணம் கவுசல்யாவை முழுமையாக மாற்றியது. தீண்டாமை, ஆணவப் படுகொலைக்கு எதிராக களத்தில் இறங்கி கவுசல்யா போராடி வந்தார். கவுசல்யாவின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள், ஆதரவு கரங்கள் நீண்டனர். அதே சமயம் கவுசல்யா குறித்தும், அவரின் செயல்கள் குறித்தும் விமர்சனங்களும் எழுந்தனர்.
இந்நிலையில், கவுசல்யா கடந்த மாதம் கோவையில் ‘நிமிர்வு கலையகம்’ என்ற பறை இசை பயிற்சி அமைப்பின் பொறுப்பாளர் சக்தி என்பவரை காதலித்து மறுமணம் செய்துக் கொண்டார். எந்த வித அறிவிப்பும் இன்றி திடீரென்று நடைப்பெற்ற இவர்களது திருமணம் பெரும் சலசலைப்பை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து, கவுசல்யா திருமணம் செய்துக் கொண்ட சக்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. சக்தி வேறொரு பெண்ணை காதலித்து ஏமாற்றியது உட்பட அவர் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார்கள் இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இதுக் குறித்து விசாரணை நடத்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் தெரிய வந்துள்ளன. அத்துடன்சக்திக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சக்தி மீதான குற்றச்சாட்டுகவுசல்யாவை திருமணம் செய்த பிறகு சக்தி மீது எழுந்த குற்றச்சாட்டுகளும், அவை குறித்து சமூக ஊடகங்களில் வந்த கருத்துகளும் வளர்ந்துகொண்டே சென்றன. இதனால், இப்பிரச்சினையில் தொடர்புடைய அனைவரையும் சென்னையில் உள்ள திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்துக்கு கடந்த 27-ம் தேதி வரவழைத்து, காலை 10 முதல் இரவு9 மணி வரை விசாரணை நடத்தினோம்.
காதலித்த பெண்ணை கைவிட்டுவிட்டு கவுசல்யாவை திருமணம் செய்துகொண்டது சக்தி மீதானமுதல் குற்றச்சாட்டு. சங்கரையே நினைத்துக்கொண்டு காலமெல்லாம் கவுசல்யா கைம்பெண்ணாகவே வாழ வேண்டும் என்ற பத்தாம்பசலி நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அவர்இன்னொருவரை காதலித்து திருமணம் செய்தது வரவேற்கத்தக்கது. அதேநேரம், சக்தி மீதான காதலால் அவரது செயலை கண்டிக்காதது கவுசல்யா செய்த தவறு.
நிமிர்வு கலையகத்தின் தலைமை ஆசான் என்ற பெயரைப் பயன்படுத்தி, சக்தி தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. ஒரு திருநங்கையும் சக்தி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதனால் அந்த அமைப்பில் இருந்து சக்தி நீக்கப்பட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தன் மீதான பாலியல் புகார்களில் இருந்து தப்பிப்பதற்காக, வேறு பெண்களைப் பற்றி சக்தி அவதூறு கூறியதாகவும் புகார் கூறப்பட்டது.
ஒரு பெண்ணை காதலித்துகைவிட்டதை சக்தி ஒப்புக்கொண்டார். ஆனால், மற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டார். கவுசல்யாவும் தனது தவறை புரிந்துகொண்டார். மீண்டும் விமர்சனம் வந்தால்,
எனவே, அவர்கள் இருவரும் பொது அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும். நிமிர்வு கலையகத்தில் இருந்து சக்தி வெளியேற வேண்டும். ரூ.3 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். 6 மாதங்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் அவர் பறை இசைக்கக் கூடாது.
இதன் பிறகும், தேவையற்றவிமர்சனங்களை பொதுவெளியில் வைத்தாலோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பினாலோ எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கைக்கு பதில் அளித்து கவுசல்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தோழர் தியாகு, தோழர் கொளத்தூர் மணி ஆகியோரின் அறிக்கையில் என் மீது சொல்லப்பட்ட பிழையை மட்டுமே நான் ஏற்கிறேன். மற்ற அவதூறுகளை மறுக்கிறேன். 6 மாத கருக்கலைப்பு என்பதும் அதற்கு நான்தான் காரணம் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். அதில் உண்மையும் இல்லை. இது தலைவர்களுக்கு நன்கு தெரியும்.
என்னுடைய பிழை என்பது சக்திக்கு முன்பு சில காதல்கள் இருந்திருக்கிறது சில போக்குகள் இருந்திருக்கிறது தெரிந்தே நான் விரும்பியதும் திருமணம் செய்து கொண்டதும் மட்டும்தான். இந்த அடிப்படையில் நான் செய்த பிழை என்று அறிக்கையில் கூறியிருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். நானும் சக்தியும் கருக்கலைப்புக்கு பொறுப்பு அல்ல என்பதை மீண்டும் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
கௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்
இவ்விளக்கம் இல்லாமல் அறிக்கையை பகிர்ந்தால் பல அவதூறுகளை ஏற்றுக்கொள்வது போல் ஆகிவிடும் என்பதாலேயே இந்த விளக்கம். இந்த அடிப்படையில் அறிக்கையை வெளியிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.