அடுத்த சர்ச்சையில் கவுசல்யா.. பணியிலிருந்து சஸ்பெண்ட்!

கவுசல்யா பறை இசைக்கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குன்னூர் வெலிங்டன் கன்டோண்மென்டில் இருந்து உடுமலை கவுசல்யாவை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கவுசல்யா சஸ்பெண்ட்:

உடுமலை ஆணவக்கொலை சம்பவத்தில் இளம் வயதிலேயே தனது கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, ஆணவக்கொலைக்கு காரணமானவர்கள் தனது பெற்றோர்களாக இருந்தும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று கொடுத்தார்.

சங்கர் இறந்த பிறகு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கவுசல்யாவுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு கவுசல்யா நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்டில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் கவுசல்யா பறை இசைக்கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார்.

நிமிர்வு கலையகத்தில் பறை கற்க வந்த சில பெண்களுடன் சக்திக்கு தொடர்பு இருந்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன.மேலும் திருநங்கை ஒருவரும் சக்தி மீது கடுமையான குற்றசாட்டுகளை எழுப்பினார்.இது தொடர்பாக பல ஆடியோ உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கவுசல்யாவின் மறுமணம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில் கிளார்க் பணியில் இருந்து வந்த கவுசல்யாவை நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. கவுசல்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு வெடித்துள்ளது.

இதன் காரணமாக அவரை சஸ்பெண்ட் செய்து நிர்வாக உத்தரவை பிற்பித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close