Advertisment

அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு: தமிழக அரசு நிலைப்பாட்டில் மாறுபடும் யுஜிசி

மத்திய நிறுவனத்தை நீதிமன்றம் ஆதரித்ததைத் தொடர்ந்து, மாநில அரசாங்கத்தின் உத்தரவுக்கு எதிராகப் பதிவு செய்யத் தொடங்கியது.

author-image
WebDesk
New Update
TNPSC Annual Planner , TNPSC Exam Notification

TNPSC Annual Planner

UGC against Arrear exam cancellation Tamil News: பேண்டமிக் காலகட்டத்தைக் காரணம் காட்டி கல்லூரி மாணவர்களின் அனைத்து அரியர் தாள்களுக்கும்  'பிளாங்கெட் பாஸ் (blanket pass)' வழங்குவதற்கான தமிழக அரசின் கோரிக்கையை, பல்கலைக்கழக மானிய குழு (UGC) எதிர்த்தது.

Advertisment

கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்வதில் தமிழக அரசு எடுத்த முடிவை எதிர்ப்பதாக கடந்த வியாழக்கிழமை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்தது. நீதிபதிகள் எம். சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா முன்னிலையில், விர்ச்சுவல் நீதிமன்றத்தில் திரண்ட மாணவர்களால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் இந்த முடிவு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் மாணவர்கள் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நீதிமன்ற பெஞ்ச் எச்சரித்தது. சீரற்ற ஐடிகள் மூலம் விர்ச்சுவல் நீதிமன்றத்தில் உள்நுழைந்த சிலர், தேர்வுகளை ரத்து செய்யுமாறு பலமுறை நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.

முதலில், யுஜிசி தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தவில்லை. ஆனால், மத்திய நிறுவனத்தை நீதிமன்றம் ஆதரித்ததைத் தொடர்ந்து, மாநில அரசாங்கத்தின் உத்தரவுக்கு எதிராகப் பதிவு செய்யத் தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் E.பாலகுருசாமியால் நகர்த்தப்பட்ட ஓர் கோரிக்கை உட்பட, அரியர் தேர்வுகளை ரத்து செய்வதற்கான இந்த பிரச்சினை பல தொகுதி வேண்டுகோள் தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, எதிர் வாக்குமூலம் தாக்கல் செய்வதற்கும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் குறித்த தனது நிலைப்பாட்டை விளக்குவதற்கும் நீதிபதிகள் யுஜிசியை கேட்டனர். மேலும், இது அரியர் தேர்வுகளை ரத்து செய்வது குறித்த மனுவே தவிர இறுதி செமஸ்டர் தேர்வுகள் பற்றியல்ல என்பதையும் தெளிவுபடுத்தினர்.

மனுவை உறுதி செய்வதற்கு முன், விசாரணையின் போது ஒரு கட்டத்தில் உண்மையில் மாநில அரசு நிறைவேற்றிய அரசாணை வழியாகத்தான் யுஜிசி சென்றதா என்று நீதிமன்ற பெஞ்ச் கேள்வி எழுப்பியது. இது தவிர, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாணை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற மாநில அரசின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டி, ஏன் மற்றவர்களின் நலனை அரசு கருத்தில் கொள்ளவில்லை என்று நீதிமன்ற பெஞ்ச் சிறப்பு அரசாங்க வழக்கறிஞர் E மனோகரனிடம் கேட்டது.

“அனைவரின் நலனையும் கருத்தில் கொள்வது அரசின் கடமை இல்லையா? ஆன்லைன் பயன்முறையில் கல்லூரி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகளை நடத்த முடிந்தால், அரியர் தேர்வுகளும் ஏன் நடத்தக்கூடாது” என்று மேலும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

யுஜிசி தனது எதிர் வாக்குமூலத்தில், அனைத்து பல்கலைக்கழகங்களும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இறுதி ஆண்டு தேர்வுகளை மட்டும் முடித்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும், உச்சநீதிமன்றமும் அதன் முடிவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Tamilnadu Ugc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment