கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகள் நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வருகிறது. அதன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அவ்வப்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உக்கடம் பேருந்து நிலையத்தை ஒட்டி மேம்பாலம் வரவுள்ளதால் அப்பகுதியில் உள்ள வணிக வளாக கட்டங்களில் இடிக்கப்படுகிறது. மேம்பாலம் வரவுள்ள பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையம் உட்புறம் அமைந்திருந்த கேரள மாநிலம் செல்லும் பேருந்து நிறுத்த பிளாக்குகளும் அகற்றப்பட்டு வருகிறது. எனவே கேரள மாநிலம் வழியாக செல்லும் பேருந்துகள் தற்போது உள்ள பிளாக்கிற்கு அடுத்த பிளாக்கில் வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/