உக்ரைன் நாட்டின் சுமி நகரில் இருந்து மீட்கப்பட்ட 700 மாணவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்.
சுமியில் தண்ணீர், உணவு, மின்சாரம் இன்று தவித்து வந்த இந்திய மாணவர்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் நேற்று மீட்டு அண்டை நாட்டின் எல்லைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் இந்திய விமானங்கள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர்.
நாட்டுக்காக உயிர் நீத்த நடிகர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து நடிகர் பாஷா லீ ஆயுதம் ஏந்தி போராடினார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி அவர் ரஷ்ய வீரர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.
குண்டு வெடிக்காத இடமே இல்லை: முன்னாள் உக்ரைன் அழகி
ரஷ்யா தொடுத்துள்ள போரால் உக்ரைனில் சைரன்களும், குண்டுகளும் வெடிக்காத இடமே இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் அழகி உருக்கமாக தெரிவித்தார்.
ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்கவும்: உக்ரைன் அதிபர்
ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் அதிகரியுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் காணொளி முறையில் அவர் பேசினார்.
வெளிநாட்டு தலைவர் ஒருவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.
உக்ரைனுக்கு சீனா உதவி
ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா, உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. உக்ரைனின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை சீனா எடுத்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் சீனா நடுநிலை வகிக்கிறது. அதேநேரம், அமைதி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்குமாறு சீனா வலியுறுத்தி வருகிறது.
- 16:25 (IST) 10 Mar 2022ரஷ்யாவில் கட்டண அடிப்படையிலான சேவைகளை நிறுத்தும் யூடியூப், கூகுள் ப்ளே
மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் நாட்டில் வங்கிச் சவால்களை ஏற்படுத்தத் தொடங்குவதால், Alphabet Inc இன் YouTube மற்றும் Google Play ஸ்டோர் சந்தாக்கள் உட்பட அனைத்து கட்டண அடிப்படையிலான சேவைகளையும் ரஷ்யாவில் நிறுத்துகின்றன. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு ட்விட்டர் இன்க் மற்றும் ஸ்னாப் இன்க் ஆகியவற்றால் இதேபோன்ற இடைநிறுத்தங்களைத் தொடர்ந்து கூகிள் மற்றும் யூடியூப் சமீபத்தில் ரஷ்யாவில் ஆன்லைன் விளம்பரங்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டன. (ராய்ட்டர்ஸ்)
- 15:57 (IST) 10 Mar 2022உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டும் – கமலா ஹாரிஸ்
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்று போலந்துடனான விவாதத்தில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வியாழனன்று வார்சாவிற்கு பயணம் செய்தபோது கூறினார், உக்ரேனிய நகரங்கள் மீது ரஷ்யா குண்டுவீச்சைத் தொடர்கிறது. உக்ரைனில் இருந்து வெளியேறிய அகதிகளை போலந்து "சிறப்பாக கையாள்வதாகவும்" ஹாரிஸ் கூறினார். (ராய்ட்டர்ஸ்)
- 15:53 (IST) 10 Mar 2022ரஷ்யா - உக்ரைன் அதிகாரிகள் இடையே துருக்கியில் பேச்சுவார்த்தை
துருக்கியில் நடைபெறும் இராஜதந்திர உச்சி மாநாட்டையொட்டி ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் செர்ஜி லாவ்ரோவ் வியாழன் அன்று உக்ரேனிய பிரதிநிதி டிமிட்ரோ குலேபா மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிரே இரண்டு ஆலோசகர்கள் அமர்ந்திருப்பதை அதிகாரப்பூர்வ புகைப்படம் காட்டுகிறது.
- 15:36 (IST) 10 Mar 2022உக்ரைன் மருத்துவமனை தாக்குதலில் 3 பேர் பலி; 17 பேர் காயம்
உக்ரைனில் மருத்துவமனை மீதான தாக்குதலில், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்
- 15:34 (IST) 10 Mar 2022உக்ரைன் மருத்துவமனை தாக்குதலில் 3 பேர் பலி; 17 பேர் காயம்
உக்ரைனில் மருத்துவமனை மீதான தாக்குதலில், 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்
- 15:00 (IST) 10 Mar 2022ரஷ்யா மீதான எந்தவொரு தாக்குதலையும் பெலாரஸ் இராணுவம் தடுக்க வேண்டும் – பெலாரஸ் அதிபர்
ரஷ்ய சப்ளை லைன்களை துண்டித்து, "மறைமுகமாக உக்ரேனியப் படைகளால் பின்புறத்தில் இருந்து ரஷ்யர்கள் மீது தாக்குதல்" நடத்தும் எந்தவொரு முயற்சியையும் தடுக்க வேண்டும் என்று பாதுகாப்புத் தலைவர்களிடம் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
- 14:08 (IST) 10 Mar 20227 மனிதாபிமான மையங்களை திறக்க உக்ரைன் முடிவு!
உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட தெற்கு துறைமுகமான மரியுபோல் உட்பட பல நகரங்களை விட்டு பொதுமக்கள் வெளியேற ஏழு "மனிதாபிமான தாழ்வாரங்களை" உக்ரைன் திறக்கிறது என்று துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறியுள்ளார்.
உள்ளூர் போர்நிறுத்தத்தின் கீழ் வடகிழக்கு நகரமான சுமியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஏற்கனவே வெளியேறத் தொடங்கியுள்ளனர் என்று சுமி பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
- 13:48 (IST) 10 Mar 2022“உக்ரைன் அரசை கவிழ்க்கும் நோக்கம் இல்லை” - ரஷியா விளக்கம்
உக்ரைன் மீது ரஷியா இன்று 15-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. உக்ரைன் மீதான இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் அரசை கவிழ்க்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷியாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மரியா ஸகாரோவா பேசுகையில், "உக்ரைன் விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்காக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவாா்த்தை நடைபெறும்.
உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் போா் உக்ரைனின் இறையாண்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
- 13:30 (IST) 10 Mar 2022ரஷ்யா இனி ஐரோப்பிய கவுன்சிலில் பங்கேற்காது!
ஐரோப்பிய கவுன்சிலில் ரஷ்யா இனி பங்கேற்காது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாக TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சட்டம் மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள், ஆட்சியை நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்ட ஐரோப்பிய அமைப்பை நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- 13:19 (IST) 10 Mar 2022600 இந்திய மாணவர்கள் போலந்து நாட்டில் தஞ்சம்; இந்தியாவிற்கு இன்று பறக்க வாய்ப்பு!
உக்ரைன் நாட்டில் உள்ள சுமியில் இருந்து வெளியேற்றப்பட்ட 600 இந்திய மாணவர்கள் போலந்து சென்றடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று இந்தியாவிற்கு பறக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12:29 (IST) 10 Mar 2022உக்ரைன் மகப்பேறு மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல்; ஐ.நா. கண்டனம்!
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 15வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். இப்போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீது ரஷிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த சம்பவத்தில் 17 பேர் காயம் அடைந்தனர். இதில் மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டு உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.
இந்த தாக்குதலுக்கு, சர்வதேச தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். காட்டுமிராண்டித்தனம் என வெள்ளை மாளிகையும், சீரழிவு என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் சாடி உள்ளனர். சுகாதார மையம் ஒரு போதும் தாக்குதலுக்கு இலக்காக கூடாது என ஐ.நா. அமைப்பின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில, " உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டுகள் நிறைந்த மருத்துவமனை ஒன்றின் மீது நடந்த தாக்குதல் பயங்கரம் ஆனது. போருடன் எந்தவித தொடர்பும் இல்லாத பொதுமக்கள் அதற்கு அதிக விலை கொடுத்து வருகின்றனர். உணர்வற்ற இந்த வன்முறை நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும். இந்த படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்" என தெரிவித்து உள்ளார்.
Today's attack on a hospital in Mariupol, Ukraine, where maternity & children's wards are located, is horrific.
— António Guterres (@antonioguterres) March 9, 2022
Civilians are paying the highest price for a war that has nothing to do with them.
This senseless violence must stop.
End the bloodshed now. - 11:51 (IST) 10 Mar 2022சுமியில் இருந்து அனைத்து இந்திய மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர்!
உக்ரைன் சுமியில் இருந்து அனைத்து இந்திய மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர் என மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு ட்வீட்டரில் தெரிவித்தார்.
A message by young Indians. It was very worrying but finally all Indian students from Sumy have been taken out. The intervention from the highest level & effective coordination of the team at the ground have saved our young students.operationganga 🇮🇳 pic.twitter.com/8ZOvQxucqg
— Kiren Rijiju (@KirenRijiju) March 10, 2022 - 11:41 (IST) 10 Mar 2022செர்னோபில் அணுமின் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு!
செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA), தற்போதுவரை ’அணுமின் நிலைய பாதுகாப்பில் எந்த முக்கிய பிரச்னையும் இல்லை’ என்று கூறியுள்ளது.
- 11:40 (IST) 10 Mar 2022கார்கிவில் 2 பெண்கள், 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
மார்ச் 9-10 இரவு நடந்த ரஷ்ய ஷெல் தாக்குதலின் விளைவாக கார்கிவில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக பிராந்தியத்தின் மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது.
- 10:56 (IST) 10 Mar 2022புக்கரெஸ்டில் இருந்து IAF விமானம் டெல்லி வந்தடைந்தது!
119 இந்தியர்கள் மற்றும் 27 வெளிநாட்டவர்களுடன் இந்திய விமானப்படை (IAF) விமானம்’ வியாழன் அதிகாலை 5.40 மணியளவில் டெல்லியில் தரையிறங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க இந்திய விமானப்படை இயக்கும் 17வது விமானம் இதுவாகும்.
- 10:17 (IST) 10 Mar 2022போரை நிறுத்துங்கள்! சூர்யா ரசிகர்கள் முன்னெடுத்த முழக்கம்!
சூர்யாவின் படங்கள் வெளியாகும்போது, மரக்கன்றுகள், அன்னதானம் , போன்ற நற்பணிகளை மேற்கொள்ளும் சூர்யா ரசிகர்கள், இன்று எதற்கும் துணிந்தவன் படம் வெளியீட்டை முன்னிட்டு, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தக்கோரி 'STOP WAR' எனும் 'முழக்கத்தை' முன்னெடுத்தனர்.
- 09:49 (IST) 10 Mar 2022உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும்!
ரஷ்யா உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்த முற்படக்கூடும் என்று பைடன் நிர்வாகம் பகிரங்கமாக எச்சரித்துள்ளது, ஏனெனில் வெள்ளை மாளிகை அது படையெடுத்த நாட்டில் சட்டவிரோத இரசாயன ஆயுதங்கள் மேம்பாடு பற்றிய ரஷ்ய கூற்றுக்களை நிராகரித்தது.
- 09:49 (IST) 10 Mar 2022உக்ரைன் மகப்பேறு மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல்!
உக்ரைன் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள’ ஒரு மகப்பேறு மருத்துவமனை மீது, ரஷ்ய விமானம் புதன்கிழமை தாக்குதல் நட த்தியது.. இந்த தாக்குதலில் குறைந்தது 17 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.