Ukraine News: உக்ரைனில் இருந்து புறப்பட்ட இரண்டாம் விமானத்தில் தமிழக மாணவர்கள் 5 பேர் உள்பட 250 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ருமேனியாவின் புகாரெஸ்ட் வழியாக வரவழைக்கப்பட்டனர்.
உக்ரைன் ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் அழைப்பு!
உக்ரைன் நாட்டின் தற்போதைய அரசை அகற்றிவிட்டு’ ராணுவ ஆட்சியை அமல்படுத்த’ உக்ரைன் ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுத உதவி: ரஷ்யா கடும் எச்சரிக்கை!
உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய’ ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள், நேட்டோ அமைப்பில் சேர’ முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் போர்.. தோல்வியில் முடிந்த ஐ.நா. தீர்மானம்!
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஐ.நா.சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியில் முடிந்தது. 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி’ ரஷ்யா தீர்மானத்தை முறியடித்தது. இதற்கிடையே ஐரோப்பிய கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
Ukraine News update: உக்ரைன் போர்.. கவலையில் இந்தியா
உக்ரைனில் ஏற்பட்டுள்ள சூழலால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது. மனித உயிர்களை பலி கொடுத்து எந்த தீர்வையும் எட்ட முடியாது. வன்முறை மற்றும் விரோதப் போக்கை உடனடியாக நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐநா சபையின் இந்திய பிரதிநிதி திருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய படையெடுப்பு.. ஐ.நா.கவுன்சில் வாக்கெடுப்பு..புறக்கணித்த நாடுகள்!
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா’ சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.
ரஷ்ய ராணுவ வீரர்கள் திரும்ப வேண்டும்.. ஐ.நா தலைவர்!
உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவ வீரர்கள் உடனடியாக தங்கள் முகாம்களுக்கு திரும்ப வேண்டும் என ஐ.நா தலைவர் ஆண்டனியோ குட்ரெஸ் உத்தரவிட்டுள்ளார்.
Ukraine News Live Updates
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள்.. பிரதமர் இன்று ஆலோசனை!
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து, டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நண்பகல் 12 மணியளவில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
உக்ரைன் போர்: 2 நாடுகளுக்கு இன்று விமானங்களை அனுப்பும் டாடா ஏர் இந்தியா நிறுவனம்!
உக்ரைன் போர்: வெளியுறவு அமைச்சகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் டெல்லியிலிருந்து ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய இரு நகரங்களுக்கும்’ 2 விமானங்களை இன்று அனுப்ப உள்ளதாக டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 3 நாட்களாக கடுமையான தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பதாக குற்றஞ்சாட்டிய ரஷ்யா உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்க ரஷ்யா ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 3 நாட்களாக கடுமையான தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியின் பலனாக தற்போது இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர் இந்திய அரசு எங்களை பாதுகாப்பாக மீட்கும் என்ற நம்பிக்கை இருந்தது; தாயகம் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 3 நாட்களாக கடுமையான தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் படை கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அந்நாட்டின் அதிபர் சொலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததை உக்ரைன் மறுத்துள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அலுவலகத்தின் தலைவர் மிகைல் பொடோலியாக், கிரெம்ளினின் அறிக்கை பொய்யானது என்றும் ரஷ்யா “ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகள் வகுத்துள்ளது என்றும்கூறியுள்ளார்.
ரஷ்ய – உக்ரைன் மோதலால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் உடைமை இழப்பு குறித்து உக்ரைன் அதிபரிடம் வேதனை தெரிவித்த பிரதமர் மோடி. வன்முறையை விட்டு பேச்சுவார்த்தை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது. இந்திய குடிமக்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் மீட்க உதவிடுமாறு உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு உடனடி ராணுவ உதவியாக 350 மில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்க உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகரின் கிவ்யாவின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ ரஷ்ய படைவீரர்கள் நகருக்குள் நுழைந்ததால் தீவிரமான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார். மாலை 5 மணி முதல் நீட்டிப்பதாகவும், காலை 8 மணி வரை “ஊரடங்கு உத்தவை மீறி வெளியில் வரும் பொதுமக்கள், அனைவரும் எதிரிகளின் நாசவேலை மற்றும் உளவு குழுக்களின் உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்” என்று கிளிட்ச்கோ கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்து அதிபர் மற்றும் கிரீஸ் பிரதமர் உடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உரையாடியுள்ளார். இரு நாடுகளும் உக்ரைனுக்கு உறுதியான உதவிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளதாக செலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைம் மீது ரஷ்யாவின் தாக்குதல் 3-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய மக்கள் அதிபர் புதினிடம் போரை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய பகுதிகள் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்
உக்ரைனுக்கு 10 நாடுகள் ஆதரவளித்து வருகிறது. ரஷ்யா மனிதர்களையும், மனிதாபிமானத்தையும் கொன்று வருகிறது. மற்ற நாடுகளின் ஆதரவையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்
ரஷ்ய தாக்குதலில் 198 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரேனிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகள் இருப்பதாக சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ சனிக்கிழமை தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் இராணுவத்தினரும் பொதுமக்களும் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வியாழன் அன்று தொடங்கிய ரஷ்ய படையெடுப்பில் 33 குழந்தைகள் உட்பட மேலும் 1,115 பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார், இது வியாழன் அன்று பெரிய வான் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் இருந்து உக்ரைனுக்குள் நுழைந்த துருப்புக்கள் மூலம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது
பெங்களூருவில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்
போலந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற அமைப்புகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன என டெல்லியில், இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி கூறியுள்ளார்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு போலந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக கால்பந்து விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது
ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து இந்தியர்களை அழைத்துக்கொண்டு முதல் ஏர் இந்திய விமானம் இந்தியா புறப்பட்டது. 219 பயணிகளுடன் இரவு 9 மணிக்கு ஏர் இந்திய விமானம் மும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்குப் பிறகு ரஷ்ய பயனர்களுக்கு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதை நிறுத்துமாறு ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்க்கு உக்ரைன் துணைப் பிரதமர் மைக்கைலோ ஃபெடோரோவ் வெள்ளிக்கிழமை ஒரு திறந்த கடிதம் எழுதினார்.
ஃபெடோரோவின் ட்விட்டரிலும் பகிரப்பட்ட கடிதம், “ரஷ்ய கூட்டமைப்பிற்கு ஆப்பிள் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை வழங்குவதை நிறுத்துமாறு” டிம் குக்கிடம் முறையிடுகிறது.
உக்ரைனின் கியேவில் இரவு நடந்த சண்டையில் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்ததாக நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ சனிக்கிழமை காலை தெரிவித்தார். உள்ளூர் நேரப்படி காலை 6 மணி நிலவரப்படி (0400 GMT), இரண்டு குழந்தைகள் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளனர், என்றார். அவர் பொதுமக்களை மட்டும் குறிப்பிடுகிறாரா என்பது தெரியவில்லை. Kyiv இல் தற்போது பெரிய ரஷ்ய இராணுவ பிரசன்னம் இல்லை என்று கிளிட்ச்கோ கூறினார், இருப்பினும் நாசகார குழுக்கள் செயலில் இருப்பதாக அவர் கூறினார்.
உக்ரைன் ராணுவம் சரணடைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவை வெறும் வதந்தி என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறுத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் நலகொண்டா அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் பயிற்சி விமானியான மகிமா உட்பட 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர்
ரஷ்ய அதிபர் புடின் ஒரு தலை பட்சமாக போரை துவங்கியதால் மீண்டும் ஐரோப்பாவில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கூறியுள்ளார்.
தெலுங்கானாவில் ஏற்பட்ட விமான விபத்தில் சென்னையை சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழப்பு. பயிற்ச்சியின் போது சிறிய ரக விமானம் கீழே விழுந்ததில் மகிமாவுடன் சென்ற விமானியும் மரணம்
உக்ரேன் நாட்டிற்கு சொந்தமான 8 கடற்படை கப்பல்களை அழித்துள்ளது ரஷ்யா என்று அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு
மத நல்லிணக்கம் குறித்து பேட்டியளித்து வைரலான பள்ளி மாணவன் அப்துல் கலாமின் பெற்றோருக்கு குடியிருப்பை ஒதுக்கி ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
உக்ரைனில் வசித்து வரும் மக்கள் குழுக்களாக பிரிந்து ஆயுதங்களுடன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவம் கைப்பற்றாமல் தடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.
உக்ரைனில் இருந்து ருமேனியாவிற்கு வருகை புரிந்த 470 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துவரப்பட உள்ளனர். அழைத்து வரப்படும் 470 நபர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்
தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள நீர் மின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய படை மெலிடோபோல் நகரை கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மேலும் ஒரு ஏர் இந்தியா விமானம் ஏ1 – 1941 ருமேனியா புறப்பட்டது. புக்காரெஸ்ட்டில் இந்த விமானம் தரையிறங்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதன்முறையாக நீதிபதி கேதான் ப்ரவுன் ஜாகசனை என்ற கருப்பின பெண் நீதிபதியை நியமித்தார் ஜோ பைடன்
உக்ரைனில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர ருமேனியாவில் உள்ள புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் AI-1943 சிறப்பு விமானம் தரையிறங்கியது
ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு, கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர் வழங்கப்படும்-அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!
சென்னை, கோடம்பாக்கத்தில் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைத்து படிப்புகளும் தமிழக மாணவர்களுக்கு எளிதாக கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. நாட்டில் உள்ள சிறப்பான கல்லூரிகளில் 30 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன என்று கூறினார்.
உக்ரைனில் இருந்த இந்திய மாணவர்கள் சிலர், இப்போது ருமேனியாவின் புக்கரெஸ்ட் விமான நிலையத்தை அடைந்துள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்கினர்.
இந்தியாவில் மேலும் 11,499 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 255 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகும் மக்களை வரவேற்க, சிரெட் நகர் எல்லையில், ரோமானிய நாட்டு மக்கள் உணவு, தண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
உக்ரைன் கிவ் நகரை, கைப்பற்ற ரஷ்யா போரிட்டு வரும் நிலையில் அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் முக்கிய இணைய சேவை ஜிகாட்ரான்ஸ், பாதிப்பை சந்தித்துள்ளதாக சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான நெட் ப்ளாக்ஸ் தகவல்!
உக்ரைன் கிவ் நகரை, கைப்பற்ற ரஷ்யா போரிட்டு வரும் நிலையில் அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் முக்கிய இணைய சேவை ஜிகாட்ரான்ஸ், பாதிப்பை சந்தித்துள்ளதாக சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான நெட் ப்ளாக்ஸ் தகவல்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 7ம் தேதி டெல்லி செல்ல இருந்த பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து ஆளுநர் டெல்லி புறப்பட்டு சென்றார்
அண்டை நாடுகளின்’ இந்திய தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் எல்லைகளை நோக்கி நகர வேண்டாம். உக்ரைனின் மேற்கு நகரங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதால் தங்குவதற்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. . கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்கவும் என உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வெள்ளிக்கிழமை இரவு பதிவு செய்த வீடியோவில்’ உயர் ஆலோசகர்களால் சூழப்பட்ட ஜனாதிபதி கட்டிடத்தின் முன் நின்று, “நாங்கள் கிவ்-ல் இருக்கிறோம். நாங்கள் உக்ரைனைப் பாதுகாக்கிறோம். ரஷ்ய படைகள் என்னை கொல்லவிருக்கின்றன. நானும் என் குடும்பமும் எங்கேயும் ஓடி ஒளியப் போவதில்லை என்று கூறினார்.
இதனிடையே’ உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன்’ அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி மூலம் பேசினார். இதுகுறித்து ட்வீட்டரில் பதிவிட்ட ஜெலன்ஸ்கி ”உக்ரைனின் நிலை என்ன என்பது இன்று முடிவாகிவிடும். இக்கட்டான நேரத்தில் அமெரிக்கா அளிக்கும் உதவிக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ராணுவ தளத்தின் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து, ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஆல்கஹால் பானங்கள்’ கனடா நாட்டில் உள்ள மதுபானக் கடைகளில் விற்பனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வான்வெளியில் ரஷ்யாவின் தனியார் ஜெட் விமானங்கள் பறக்கவும், தரையிறங்கவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம்’ நாஞ்சிக்கோட்டையில் சிவராத்திரியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 650க்கும் மேற்பட்ட காளைகள், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமானந்தா பிஸ்வால் (82) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
புரோ கபடி லீக் இறுதி போட்டியில் 37-36 என்ற கணக்கில் பாட்னா அணியை வீழ்த்தி’ டெல்லி தபாங் அணி’ சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி’ இன்று தரம்சாலாவில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சென்னையில் தொடர்ந்து 114-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.