Ukraine News: கச்சா எண்ணெயின் விலை ஒரே நாளில் 10% அதிகரிப்பு!
ரஷ்ய - உக்ரைன் போரால், கச்சா எண்ணெயின் விலை ஒரே நாளில் 10% அதிகரித்தது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 106 அமெரிக்க டாலரை தாண்டியது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.
ரஷ்யாவில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனை நிறுத்தம்!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு 'ஆப்பிள்' நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யாவில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனை, ஆப்பிள் பே உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க ஐரோப்பிய நாடுகள் உதவி!
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க ஐரோப்பிய நாடுகள் உதவிகள் செய்யும் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் உறுதியளித்துள்ளார்.
Ukraine News Live Updates
உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய நாடுகள்!
பல்கேரியா, போலந்து, சுலோவாகிய ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை தர முன் வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய வீரர்களுக்கு அனைத்து விளையாட்டு போட்டிகளில் இருந்தும் தடை!
உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து போட்டிகளில் இருந்தும் தடை விதித்து உலக தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து 60 சதவிகிதம் இந்தியர்கள் மீட்பு!
மத்திய அரசிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில், கீவ் நகரில் இந்தியர்கள் யாரும் இல்லை. உக்ரைனில் உள்ள 20 ஆயிரம் இந்தியரில்’ 60 சதவிகிதம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். போலந்து சுலோவாகியாவில் இருந்து இனி மீட்பு பணிகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியர்களை மீட்க அடுத்த சில நாட்களில் 26 விமானங்கள் இயக்கம்!
கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் இருந்து 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளன; மேலும் 1,377 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவர, அடுத்த சில நாட்களில் 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:34 (IST) 02 Mar 2022உக்ரைனில் மருத்துவ மாணவர் மரணம்; நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – ஸ்டாலின்
மருத்துவம் படிக்கச் சென்று உயிரிழந்த மாணவனின் அவல நிலை நீட் விலக்கு மசோதாவின் நோக்கத்தை மீண்டும் உணர்த்துகிறது. உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை உருவாக்கியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
- 22:33 (IST) 02 Mar 2022உக்ரைனில் மருத்துவ மாணவர் மரணம்; நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – ஸ்டாலின்
மருத்துவம் படிக்கச் சென்று உயிரிழந்த மாணவனின் அவல நிலை நீட் விலக்கு மசோதாவின் நோக்கத்தை மீண்டும் உணர்த்துகிறது. உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை உருவாக்கியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
- 21:02 (IST) 02 Mar 2022உக்ரைனின் ஜபோரிஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியை கைப்பற்றியது ரஷ்யப் படைகள்
உக்ரைனின் Zaporizhzhia அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியை ரஷ்யப் படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக ஐநாவின் அணுசக்தி கண்காணிப்புத் தலைவர் ரஃபேல் க்ரோஸியை மேற்கோள் காட்டி தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய இராஜதந்திரிகள் சர்வதேச அணுசக்தி முகமைக்கு பணியாளர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்ததாகவும், கதிர்வீச்சு அளவுகள் "இயல்புநிலையில் உள்ளது" என்றும் கிராஸ்ஸி கூறினார். ஜபோரிஜியா அணுமின் நிலையம் ஐரோப்பாவின் மிகப்பெரிய மின் நிலையம் என்றும் உக்ரைனின் 15 அணுசக்தி உலைகளில் ஆறு உலைகளைக் கொண்டுள்ளது என்றும் க்ரோஸியின் அறிக்கை கூறியது.
- 20:57 (IST) 02 Mar 2022உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய தூதுக்குழுவினர் பயணம்
உக்ரேனிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய தூதுக்குழு ஒன்று பயணிக்கிறது என்று பெலாரஸின் பெல்டா செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
- 20:41 (IST) 02 Mar 2022உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று இரவு 8.30 மணிக்கு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
- 20:10 (IST) 02 Mar 2022உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர் -இந்திய வெளியுறவுத்துறை
உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளனr என இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்
- 19:50 (IST) 02 Mar 2022பஞ்சாபைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உக்ரைனில் மூளைச்சாவு
உக்ரைனில் உள்ள வின்னிட்சியாவில் உள்ள பைரோகோ நினைவு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவரும், பஞ்சாபின் பர்னாலாவில் வசிக்கும் சந்தன் ஜிண்டால் என்ற 22 வயது இளைஞர் புதன்கிழமை காலை மூளைச்சாவு காரணமாக இறந்தார். பர்னாலா நகர் கவுன்சிலில் உள்ள முனிசிபல் கவுன்சிலரும், பாஜகவின் மாநில துணைத் தலைவருமான அவரது உறவினரான நீரஜ் ஜிண்டால் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.
- 19:31 (IST) 02 Mar 2022எல்லையை கடப்பவர்களிடம் எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை -உக்ரைன்
உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், உக்ரைனில் வெளிநாட்டு குடிமக்கள் எல்லையை கடக்கும்போது எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது
- 19:31 (IST) 02 Mar 2022எல்லையை கடப்பவர்களிடம் எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை -உக்ரைன்
உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், உக்ரைனில் வெளிநாட்டு குடிமக்கள் எல்லையை கடக்கும்போது எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது
- 19:10 (IST) 02 Mar 2022ரஷ்ய தாக்குதலில் 2,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்: உக்ரேனிய அரசு
உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு 2,000 க்கும் மேற்பட்ட உக்ரேனிய குடிமக்களை கொன்றுள்ளது மற்றும் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள், மழலையர் பள்ளி மற்றும் வீடுகள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டமைப்புகளை அழித்துள்ளது என்று உக்ரைனின் அவசர சேவை புதன்கிழமை தெரிவித்துள்ளது. குழந்தைகள், பெண்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒவ்வொரு மணி நேரமும் உயிரிழக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (ராய்ட்டர்ஸ்)
- 18:11 (IST) 02 Mar 2022கார்கிவ்-ல் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேற உத்தரவு
கார்கிவ்-ல் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. கார்கிவில் உள்ள அனைத்து இந்திய நாட்டவர்களுக்கும் அவசர ஆலோசனை. அவர்களின் பாதுகாப்புக்காக உடனடியாக கார்கிவை விட்டு வெளியேற வேண்டும்.
முடிந்தவரை விரைவில் PESOCHIN, BABAYE மற்றும் BEZLYUDOVKA ஐத் தொடரவும். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவர்கள் இந்த குடியிருப்புகளை *இன்று 18.00 மணி நேரத்திற்குள் (உக்ரைன் நேரம்) சென்றடைய வேண்டும். என்று அறிவித்துள்ளது.
URGENT ADVISORY TO ALL INDIAN NATIONALS IN KHARKIV.
— India in Ukraine (@IndiainUkraine) March 2, 2022
FOR THEIR SAFETY AND SECURITY THEY MUST LEAVE KHARKIV IMMEDIATELY.
PROCEED TO PESOCHIN, BABAYE AND BEZLYUDOVKA AS SOON AS POSSIBLE.
UNDER ALL CIRCUMSTANCES THEY MUST REACH THESE SETTLEMENTS *BY 1800 HRS (UKRAINIAN TIME) TODAY*. - 18:07 (IST) 02 Mar 2022மூன்றாம் உலகப் போர் அணுகுண்டுகளை உள்ளடக்கியதாக இருக்கும் - ரஷ்ய வெளியுறவு அமைச்சர்
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் புதன்கிழமை கூறுகையில், மூன்றாவது உலகப் போர் நடந்தால், அது அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாகவும், அழிவுகரமானதாகவும் இருக்கும் என்று ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் உக்ரைனுக்கு எதிராக ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று அறிவித்த ரஷ்யா, கீவ் அணு ஆயுதங்களை வாங்கினால் உண்மையான ஆபத்தை எதிர்கொள்ளும் என்று லாவ்ரோம் கூறினார். இதனிடையே, ரஷ்யா துருப்புக்களை கீவ் நகருக்கு மிக நெருக்கமாகவும் திரட்டுகிறது என்று உக்ரைன் தலைநகரின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ புதன்கிழமை ஒரு ஆன்லைன் பதிவில் எழுதினார். “நாங்கள் தயாராகி வருகிறோம், கீவ்வைப் பாதுகாப்போம். கீவ் நிற்கிறது... கீவ் நிற்கும்” என்று பதிவிட்டிருந்தார்.
- 18:01 (IST) 02 Mar 2022உக்ரைனுக்கு ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க தைவான் அதிபர் சாய் இங் வென் முடிவு
ரஷ்யப் படைகளால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க தைவான் அதிபர் சாய் இங் வென் முடிவு செய்துள்ளார்.
- 16:37 (IST) 02 Mar 2022உக்ரைனில் இருந்து இதுவரை 6,80,000 பேர் வெளியேறியுள்ளதாக தகவல்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 6,80,000 பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24 அன்று ரஷ்ய இராணுவப் படையெடுப்பிற்குப் பிறகு 680,000 பேர் உக்ரேனை விட்டு வெளியேறியுள்ளனர், இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
- 16:37 (IST) 02 Mar 2022உக்ரைனில் இருந்து இதுவரை 6,80,000 பேர் வெளியேறியுள்ளதாக தகவல்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 6,80,000 பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24 அன்று ரஷ்ய இராணுவப் படையெடுப்பிற்குப் பிறகு 680,000 பேர் உக்ரேனை விட்டு வெளியேறியுள்ளனர், இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்து அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
- 16:08 (IST) 02 Mar 2022ரஷ்ய படைகளை எதிர்கொள்ள"நாங்கள் தயாராகி வருகிறோம் -மேயர் விட்டலி கிளிட்ச்கோ
ரஷ்யா படைகளை கியேவுக்கு நெருக்கமாக திரட்டுகிறது இதனை எதிர்கொள்ள"நாங்கள் தயாராகி வருகிறோம், கியேவைப் பாதுகாப்போம்!," என்று உக்ரேனிய தலைநகரின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.
- 16:06 (IST) 02 Mar 2022மூன்றாவது உலகப் போர் அணுசக்தி மற்றும் அழிவுகரமானதாக இருக்கும் - ரஷ்யா
மூன்றாவது உலகப் போர் நடந்தால், அது அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாகவும், அழிவுகரமானதாகவும் இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் என்று கூறியுள்ளார்.
- 15:40 (IST) 02 Mar 2022பெலாரஸ் - போலந்து எல்லையில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை
உக்ரைன் உடன் இன்று இரவு பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. ஏற்கனவே பெலாரசில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில், 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. பெலாரஸ் - போலந்து எல்லையில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 15:38 (IST) 02 Mar 2022சேதமடைந்த வாகனங்களை கொண்டு தடைகளை ஏற்படுத்திய பொதுமக்கள்
உக்ரைன்கீவ் நகரில் ரஷ்ய படைகள் முன்னேறாமல் தடுக்க சேதமடைந்த வாகனங்களை கொண்டு, பொதுமக்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
- 15:00 (IST) 02 Mar 2022உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை வழியாக மாணவர்கள்
உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை வழியாக நடந்து செல்லும் மாணவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் ராணுவத்தினரிடையே கடும் சண்டை நடந்துவருவதை அடுத்து, உயிருக்கு அஞ்சி அவர்கள் மெட்ரோ சுரங்கப் பாதை வழியாக நடந்து செல்கின்றனர்.
- 14:53 (IST) 02 Mar 2022உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை வழியாக மாணவர்கள்
உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை வழியாக நடந்து செல்லும் மாணவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் ராணுவத்தினரிடையே கடும் சண்டை நடந்துவருவதை அடுத்து, உயிருக்கு அஞ்சி அவர்கள் மெட்ரோ சுரங்கப் பாதை வழியாக நடந்து செல்கின்றனர்.
- 14:46 (IST) 02 Mar 2022மரியுபோல் நகரம் கட்டுப்பாட்டில் உள்ளது: உக்ரைன்
மரியுபோல் நகரம் தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
A piece of shrapnel stuck in Ukrainian passport. It saved life of the 16 year boy. The boy is in surgery now. Shelling of the city continues.
— MFA of Ukraine 🇺🇦 (@MFA_Ukraine) March 2, 2022
📍Mariupol, Ukraine, 1 March 2022 pic.twitter.com/gIRyuHZKjI - 14:31 (IST) 02 Mar 2022இதுவரை 139 தமிழக மாணவர்கள் மீட்பு: மத்திய அரசு
உக்ரைனில் இருந்து இதுவரை 139 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 14:13 (IST) 02 Mar 202264 கிமீ தூரத்திற்கு வரிசையில் நிற்கும் ரஷ்ய போர் வாகனங்கள்
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் 64 கிமீ தூரத்திற்கு வரிசை கட்டி ரஷ்ய போர் வாகனங்கள் நிற்கும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.
- 14:10 (IST) 02 Mar 2022இந்திய மாணவர் மரணம் குறித்து விசாரணை: ரஷ்ய தூதர்
இந்திய மாணவர் நவீன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் அறிவித்துள்ளார்.
- 13:49 (IST) 02 Mar 2022உலக தடகள போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை
சர்வதேச தடகள போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க உலக தடகள அமைப்பு தடை விதித்துள்ளது. முன்னதாக, டென்னிஸ் போட்டிகளில் ரஷ்யா, அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 13:41 (IST) 02 Mar 20226 நாளில் 6,000 ரஷ்ய வீரர்கள் பலி: உக்ரைன் அதிபர்
போர் தொடங்கிய 6 நாட்களில் 6,000 ரஷ்ய வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
- 13:27 (IST) 02 Mar 2022உக்ரைனின் கெர்சன் நகரை கைப்பற்றியது ரஷ்யா
கெர்சன் நகரை கைப்பற்றியிருப்பதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளங்கள் இருக்கின்ற இந்த நகரை கைப்பற்றியிருப்பதன் மூலம் ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளது.
- 13:18 (IST) 02 Mar 2022உக்ரைன்: கார்கிவ் நகரில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற்றம்
உக்ரைன் கார்கிவ் நகரில் இருந்து வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
- 12:58 (IST) 02 Mar 2022கார்கிவ் தாக்குதல் 21 பேர் பலி
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 112 பேர் படுகாயம் என தகவல். பாதுகாப்பு சேவை மையத்தில் நடைபெற்ற தாக்குதலில் சிக்கி 21 உக்ரேனியர்கள் பலியாகினர்
- 12:57 (IST) 02 Mar 2022பாதுகாப்பு சேவை கட்டிடம் மீது தாக்குதல்
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள உக்ரைன் நாட்டு பாதுகாப்பு சேவை கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. ஏவுகணை தாக்குதலில் கட்டிடம் தீப்பற்றி எரிந்து வருகிறது.
- 12:55 (IST) 02 Mar 2022கார்கிவ் நகர் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை துவங்கியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அதே போன்று சுமி என்ற நகரின் மீதும் செல் குண்டுகள் வீசப்பட்டு விமானப்படை தாக்குதல்
- 12:21 (IST) 02 Mar 20226 to 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்போது?
மே மாதம் 5ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2 முதல் 4 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று அறிவிப்பு
- 12:07 (IST) 02 Mar 2022அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேர் நேரில் ஆஜராக சம்மன்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கியபோது உடனிருந்த 10 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது ஆறுமுகசாமி ஆணையம்
- 12:05 (IST) 02 Mar 2022உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் நலமுடன் வீடு திரும்ப கூட்டு பிரார்த்தனை
எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வருகின்றனர் படக்குழுவினர். உக்ரைனில் இருந்து வரும் வீடியோக்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. எல்லாரும் பாதுகாப்பாக தாயகம் திரும்ப வேண்டும் என்று சில நேரம் அமைதியாக வேண்டிக் கொள்ளலாம் என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
- 11:19 (IST) 02 Mar 2022வெளியானது எதற்கும் துணிந்தவன் ட்ரைலர்
பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சூரரைப் போற்று, ஜெய்பீம், படத்தைத் தொடர்ந்து வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
- 11:01 (IST) 02 Mar 2022முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 5ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம்!
சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை!
- 11:00 (IST) 02 Mar 2022கோவை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா!
கோவை மாநகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
- 11:00 (IST) 02 Mar 2022தாம்பரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு!
தாம்பரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா தொடங்கியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதேபோல், சென்னை மாநகராட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாமன்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா தொடங்கியது.
- 10:40 (IST) 02 Mar 2022பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு!
ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு , ஜூலை 7ம் தேதி 11ம் வகுப்பு, ஜூன் 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
- 10:31 (IST) 02 Mar 2022பொதுத்தேர்வு தேதி அட்டவணை அறிவிப்பு!
- 10ம் வகுப்பு: மே.6 - மே.30
- 11ம் வகுப்பு: மே.9- மே.31
- 12ம் வகுப்பு: மே.5- மே.28
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்குகிறது. பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை இன்னும் 1 மணி நேரத்தில் http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
- 10:17 (IST) 02 Mar 2022ஏப்ரல் 25ல் செய்முறைத் தேர்வுகள் தொடங்குகிறது!
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
- 10:09 (IST) 02 Mar 2022தங்கம் விலை சவரனுக்கு ரூ. 616 உயர்வு!
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 616 உயர்ந்து, ரூ. 39 ஆயிரத்துக்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,875-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 09:43 (IST) 02 Mar 2022சர்வதேச டென்னிஸ் தொடர்களில் ரஷ்யா பங்கேற்க அனுமதி!
சர்வதேச டென்னிஸ் தொடர்களில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க அனுமதியளித்து சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
- 09:43 (IST) 02 Mar 2022உக்ரைன் கார்கிவ் நகரில் தரையிறங்கிய ரஷ்ய வீரர்கள்!
உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் நகரில்’ ரஷ்ய வான்வெளி வீரர்கள் தரையிறங்கியுள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
- 09:12 (IST) 02 Mar 2022உக்ரைனில் இருந்து 1,377 இந்தியர்கள் மீட்கப்பட்டு நாடு திரும்புகின்றனர்!
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன. உக்ரைனில் இருந்து 1,377 இந்தியர்கள் மீட்கப்பட்டு நாடு திரும்புவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!
- 09:11 (IST) 02 Mar 2022பொதுத்தேர்வு தேதி அட்டவணை இன்று அறிவிப்பு!
10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.
- 09:11 (IST) 02 Mar 2022உக்ரைனுக்கு ராணுவம், பொருளாதார உதவி.. அமெரிக்க அதிபர் அறிவிப்பு!
உக்ரைனின் தலைநகரை சுற்றி ராணுவ வாகனங்களை மட்டுமே புதினால் நிறுத்த முடியும். அதேநேரம் உக்ரைன் மக்களின் இதயங்களை அவரால் எப்போதும் வெல்ல முடியாது.
உக்ரைனுக்கு ராணுவம், பொருளாதாரம் போன்ற உதவிகளை வழங்கி, நட்பு நாடுகளுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவில் உள்ள ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்கள், தனியார் விமானங்கள் ஆகியவற்றை கைப்பற்றுவோம் -அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
- 08:30 (IST) 02 Mar 2022ரஷ்ய விமான நிறுவனங்களுக்கான ஆதரவு நிறுத்தம்!
ரஷ்ய விமான நிறுவனங்களுக்கான ஆதரவை நிறுத்தி வைப்பதாக அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
- 08:29 (IST) 02 Mar 2022புதின் தவறாக நினைத்துவிட்டார்.. அமெரிக்க அதிபர்!
சர்வாதிகாரிகள் தங்களின் ஆக்கிரமிப்பு செயலுக்கு கண்டிப்பாக விலை கொடுத்தே தீர வேண்டும். மேற்கத்திய நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்து விட்டார். நாங்கள் உக்ரைன் மக்களுடன் நிற்கிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாடாளுமன்றத்தில் பேசினார்.
- 08:28 (IST) 02 Mar 2022உக்ரைனில் இருந்து 10வது விமானம் இன்று காலை டெல்லி வந்தது!
தமிழ்நாட்டை சேர்ந்த 3 மாணவர்கள் உட்பட உக்ரைனில் இருந்து 10வது விமானம் இன்று காலை டெல்லி வந்தது.
- 08:28 (IST) 02 Mar 2022உக்ரைன் தொலைக்காட்சி டவர் மீது தாக்குதல்.. 5 பேர் பலி!
உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைகளால் தாக்கி வரும் நிலையில், கீவ் நகரில் உள்ள தொலைக்காட்சி டவர் ஒன்று தகர்க்கப்பட்டதில் 5 பேர் பலியாகினர்.
- 08:27 (IST) 02 Mar 2022உக்ரைனுக்கு இந்தியா மேலும் உதவி!
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு இந்தியா மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. போலந்து வழியாக இன்று மேலும் சில உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது.
- 08:27 (IST) 02 Mar 2022போரை நிறுத்த உத்தரவு!
உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதலை நிறுத்த ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 08:27 (IST) 02 Mar 2022அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடை!
ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து, அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
- 08:26 (IST) 02 Mar 2022வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பு!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்கின்றனர். மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர் பதவி, . அதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.