/indian-express-tamil/media/media_files/2025/04/09/manyg7rhFOOjb0wtt60I.jpg)
புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், புற்று நோய் தொடர்பான சிகிச்சையில் தொடர்ந்து அதி நவீன சிகிச்சை முறைகளை உலகம் ஆய்வு செய்து வரும் நிலையில், புற்று நோய் சிகிச்சைக்கு அதி நவீன லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில் நுட்பம் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் முதன்மையானதுமான ஐடென்டிஃபை ("IDENTIFY") தொழில் நுட்பத்திலான புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ("லீனியர் ஆக்சிலரேட்டர்") ("Linear Accelerator") இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் துவக்கி வைத்தார்.
தற்போது புற்று நோய் பதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புற்று நோய் தொடர்பான சிகிச்சையில் தொடர்ந்து அதி நவீன சிகிச்சை முறைகளை உலகம் ஆய்வு செய்து அறிமுகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ஜி.கே.என்.எம்.மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில், புதிய அதி நவீன இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளனர்..
தென்னிந்தியாவில் முதன்மையானதுமான ஐடென்டிஃபை (IDENTIFY) தொழில் நுட்பத்திலான இயந்திரத்தை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், மற்றும் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி ஆகியோர் இந்த வசதியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.
நவீன இயந்திரத்தின் செயல்பாடு குறித்து ஜி.கே.என்.எம் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் கார்த்திகா சிவப்பிரகாசம் கூறியதாவது.
எஸ்.ஜி.ஆர்.டி உடன் கூடிய ட்ரூபீம் லீனியர் ஆக்சிலரேட்டர் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக்
குறிக்கிறது. இது பாதுகாப்பான, மிகவும் துல்லியமான மற்றும் வசதியான சிகிச்சைகளை வழங்குகிறது.
இந்த முறையில் வழங்கப்படும் சிகிச்சை நோயாளியின் மேற்பரப்பைத் தொடர்ந்து கண்காணிக்க கேமராக்கள் மற்றும் ஒரு ப்ரொஜெக்டரைப் பயன்படுத்துவதால்,
கதிர்வீச்சு துல்லியமாக வழங்கப்படுவதை உறுதிசெய்வதோடு, சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுவதைக் குறைப்பதாக இவ்வாறு தெரிவித்தனர்.
கதிர்வீச்சு சிகிச்சை முறையை வழங்க உள்ள ட்ரூபீம் லீனியர் ஆக்சிலரேட்டர்,எனும் இயந்திரத்தை துவக்குவதற்கான விழா ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் மையத்தில் (வி.என்.சி.சி) நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.