/indian-express-tamil/media/media_files/2025/04/25/uGx2iWGtqCBa8wD9qP71.jpg)
Ulundurpet DSP Pradeep Audio controversy
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியில் மணல், வண்டல் மண் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மணல் கடத்தல் கும்பல் மற்றும் ராட்டினம் அமைப்பவர்களிடம் காவல்துறையினர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், புதுக்கோட்டையில் மணல் லாரிகளில் மணல் கடத்துவதற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ₹5000 லஞ்சம் வசூலிக்க வேண்டும் என்று உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் எதிரொலியாக, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப்பை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தெற்கு மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார். மேலும், டிஎஸ்பி பிரதீப் மீதான லஞ்ச புகார் குறித்து ஐஜி தலைமையில் விசாரணை நடத்தவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.