பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உமாகார்க்கி என்ற பெண் நீண்ட நாட்களாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். தனது சமூக வலைதள பக்கத்தில் திமுக, பெரியார், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களையும் அவர்களை சார்ந்த மிகவும்
குடும்பத்தினரையும் அநாகரீகமான வார்த்தைகளால் சமூகவலைதளமான ட்விட்டரில் விமர்சனம் செய்து வந்தார்.
சமீபத்தில் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடம் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஜய் 'பெரியார், அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தலைவர்களை மாணவர்கள் முழுமையாக படிக்க வேண்டும்' என்றார்.
இதனையடுத்து, பா.ஜ.க-வின் உமா கார்க்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பெரியார் மற்றும் நடிகர் விஜய் குறித்து அவதூறான கருத்துக்களையும் விஜய் மகள் குறித்து அருவருக்கத்தக்க வகையிலான ஆபாச கருத்துக்களையும் பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை எழும்பூர் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கோவை சைபர் கிரைம் காவல்துறையினரிடம் திமுகவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அணி வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஸ் கொடுத்த புகாரின் பேரில் கோவையில் சைபர் கிரைம் போலீசார் உமா கார்க்கியை கைது செய்துள்ளனர்.
உமா கார்க்கி நேற்று காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கைகளால் சிறந்த சமூக ஊடக செயல்பாட்டாளருக்கான விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.