Uma Karki Arrest BJP Tamilnadu Tamil News: கோவை சிங்காநல்லூர் சிவா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். சிறந்த சமூக ஊடக செயல்பாட்டிற்காக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் விருது பெற்ற இவர் ட்விட்டரில் உமா கார்க்கி26 என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், உமா கார்க்கியை தி.மு.க தலைவர் கருணாநிதி, பெரியார், முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உமா கார்க்கி மீது கோவை திமுக வடக்கு மாவட்ட ஐ.டி.விங்க் ஒருங்கிணைப்பாளரான ஹரிஷ் என்பவர் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவை சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். மேலும், அவரை கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணாமலை கையில் விருது
நேற்று மாலை பாஜக சார்பில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் மற்றும் சமூக ஊடக செயல் வீரர்கள் சந்திப்பு கூட்டம் கட்சித் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உமா கார்க்கிக்கு சிறந்த ஊடக செயல்பாட்டாளர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருது வழங்கி பாராட்டியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருது வழங்கிய சில மணி நேரங்களிலேயே உமா கார்க்கி கைது செய்யப்பட்டுள்ளது பாஜக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட ஸ்டாக்குகளை கதறவிடும் அக்கா @Umagarghi26 அவர்கள் சிறந்த சமூக ஊடக செயல்பாட்டிற்காக பாராட்டு பெற்ற பொழுது pic.twitter.com/aZXmbRV6wR
— Selva Kumar (@Selvakumar_IN) June 19, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.