நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் உள்பட 3 பேர் கொலை: பதற வைக்கும் கொடூரக் காட்சிகள்

DMK Mayor Uma Maheshwari Murdered : வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்

Tamil Nadu news today in tamil,
Tamil Nadu news today in tamil,

Uma Maheshwari Murdered : நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிக்கொலை. வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலைக்கான காரணம் தொழில் ரீதியான போட்டியா ? அல்லது அரசியல் பின்புலத்தில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக முன்னாள் மேயரான உமா மகேஸ்வரி மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றவர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது நடந்துள்ள இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் மேயரான உமாமகேஸ்வரியின் பெயரில் அதிக சொத்துக்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா என்ற பாணியிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Live Blog

Former Nellai DMK Mayor Uma Maheshwari murdered – முன்னாள் நெல்லை திமுக மேயர் உமா மகேஸ்வரி வெட்டிக் கொலை


20:05 (IST)23 Jul 2019

Uma Maheshwari Murder reason? : ஆதாயக் கொலையாக இருக்கவே வாய்ப்பு – கமிஷனர்

ஆதாயக் கொலையாக இருக்கவே வாய்ப்பு என நெல்லை மாநகர கமிஷனர் தெரிவித்துள்ளார். வளையல் கம்மல்கள் உள்ளிட்ட நகைகள் கொள்ளை போய் உள்ளதாகவும், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் கொலைக்கும்பலை பிடித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

19:55 (IST)23 Jul 2019

வீட்டில் சடலமாக உமா மகேஸ்வரி

வீட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட நெல்லை  திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகசங்கரன்

19:44 (IST)23 Jul 2019

கொலைக்கான காரணம் தொழில் ரீதியான போட்டியா ?

கொலைக்கான காரணம் தொழில் ரீதியான போட்டியா ? அல்லது அரசியல் பின்புலத்தில் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக முன்னாள் மேயரான உமா மகேஸ்வரி மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றவர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது நடந்துள்ள இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் மேயரான உமாமகேஸ்வரியின் பெயரில் அதிக சொத்துக்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா என்ற பாணியிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

19:41 (IST)23 Jul 2019

Uma Maheshwari Husband Murdered – உமா மகேஸ்வரியின் கணவர் யார்?

வெட்டிக் கொல்லப்பட்ட உமாமகேஸ்வரியின் கணவர் பெயர் முருகசங்கரன். இவர் ஓய்வுபெற்ற நெடுஞ்சாலை துறை பொறியாளர் ஆவார்.

19:36 (IST)23 Jul 2019

Uma Maheshwari Murdered – கொலை நடந்தது எப்படி?

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. திமுகவை சேர்ந்த இவர் நெல்லை அருகேயுள்ள ரெட்டியார் பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் அவர், தனது கணவருடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த ஒரு மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க வந்த பணிப்பெண்ணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

19:26 (IST)23 Jul 2019

Former Nellai Mayor Uma Maheshwari Murdered – நாகர்கோவிலில் பணிபுரியும் உமா மகேஸ்வரி மகள்

உமா மகேஸ்வரியின் மகள் கார்த்திகா நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பலியாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

19:20 (IST)23 Jul 2019

Former DMK Mayor Uma maheswari murdered : கடைசியாக உமா மகேஸ்வரி கலந்து கொண்ட நிகழ்வு

உமா மகேஸ்வரியின் உறவினர்கள் திரண்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக உள்ளது. சம்பவ இடத்தில் நெல்லை மாநகர கமிஷனர் துணை கமிஷனர் பார்வையிட்டுக் கொண்டு இருக்கின்றனர். கடைசியாக அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட விழாவில் இன்னிசை கச்சேரி என்பது குறிப்பிடத்தக்கது.

19:17 (IST)23 Jul 2019

Uma Maheswari Murdered – பணிப்பெண் மூன்று பெண் குழந்தைகளின் தாய்

பணிப்பெண் மாரி வயது 30 இவர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருகிறார் விதவைப் பெண்ணான இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

19:11 (IST)23 Jul 2019

Uma Maheshwari Murdered : போலீஸ் தீவிர விசாரணை

வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் உட்பட மூன்று பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் விரைந்த போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. வீட்டில் இருந்த நகையும் திருடு போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

18:57 (IST)23 Jul 2019

நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் வெட்டிக் கொலை

1996ம் ஆண்டு திமுக சார்பில், நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உமா மகேஸ்வரி. இந்நிலையில், இன்று நெல்லை ரெட்டியார்பட்டியில் வீட்டில் இருந்த போது, உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் வீட்டில் பணி செய்து வந்த பணிப்பெண் ஆகிய மூவரையும் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்திருக்கின்றனர். 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Uma maheswari former nellai dmk mayor murdered live updates

Next Story
சென்னையில் பட்டப் பகலில் பட்டாக் கத்தியுடன் பேருந்தில் மோதிய மாணவர்கள்; அலறியடித்து ஓடிய பயணிகள் – வீடியோpachaiyappa college students gang fight chennai video - சென்னையில் பட்டப் பகலில் பட்டாக் கத்தியுடன் பேருந்தில் மோதிய மாணவர்கள்; அலறியடித்து ஓடிய பயணிகள் - வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com