/tamil-ie/media/media_files/uploads/2019/12/template-2019-12-13T083637.255.jpg)
pocso, posco act, child porn children sexual abuse ban , sexual abuse
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக , போக்ஸோ சட்டத்தின் கீழ் திருச்சியில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐபி முகவரிகளை கொண்டு மேலும் 30 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...
திருச்சி காஜாபேட்டையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ், இணையத்திலிருந்து குழந்தைகளின் ஆபாச படங்களை டவுன்லோடு செய்வது, அப்லோடு செய்வது தனது சமூகவலைத் தள பக்கங்களில் உள்ள நண்பர்களுக்குப் பகிர்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்ஸோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் ஆபாச வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரை போலீசார் டிசம்பர் 12ம் தேதி கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கிறிஸ்டோபர் குழுவை சேர்ந்த 30 பேரிடம் திருச்சி போலீசார் டிசம்பர் 13ம் தேதி விசாரணை நடத்த உள்ளனர். ஐதராபாத், உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக திருச்சியில் முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.