’வருண்குமார் ஐ.பி.எஸ் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது' - ஐகோர்ட்டில் சீமான் பதில் மனு

நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் என சீமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் என சீமான் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madras high court order to Seeman Varun Kumar  IPS case Tamil News

'ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் வருண்குமார்' - ஐகோர்ட்டில் சீமான் பதில் மனு தாக்கல்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் ஆகியோரிடையே அண்மையில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பான பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கச் சீமானுக்குத் தடை விதிக்கக் கோரியும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு கோரியும் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு சீமான் சார்பில் தற்போது பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சீமான் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியை நோக்கிப் பின்வரும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சிறை சென்றவர் வருண்குமார் என்று கடுமையாகச் சாடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி.யாக இருந்தபோது, ட்விட்டரில் தனது சொந்தக் கருத்துகளைப் பதிவிட்டதற்காகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் வருண்குமார் என்றும், இதுவே அவரின் நடத்தைக்குச் சாட்சி என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருண்குமார் குறித்துத் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும், காவல்துறை அதிகாரியாக அவரின் செயல்பாடுகள் குறித்து மட்டுமே விமர்சித்ததாகவும் சீமான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த விமர்சனத்தைக்கூட தாங்கிக் கொள்ள முடியாதவர் எப்படி ஐ.பி.எஸ். அதிகாரியானார் என்பது தெரியவில்லை என்றும் நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், அவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கத் தகுதியற்றவர் என்றும் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisment
Advertisements

வருண்குமார் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது என்றும் பதில் மனுவில் சீமான் சாடியுள்ளார். மேலும், தனக்கெதிரான மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால், அதனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சீமான் தனது பதில் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி தனபால், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 11-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார்.

Seeman Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: