கோவையில் ரூ.12,000 விலை மதிப்புள்ள பூனையை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கணபதி மாநகர் வி,வி நகர் பகுதியை சாய் சங்கர். இவர் அப்பகுதியில், கோவில் அர்ச்சகராக உள்ளார். இவர் மாஸ்டர் படத்தில் விஜய் வைத்திருக்கும் போன் பெர்சியன் ரக பூனையை வாங்கி வளர்த்து வந்துள்ளார். அதை அவர் ரூ.12,000 வாங்கியுள்ளார். வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த பூனை வழக்கமாக வீட்டிற்கு வெளியே வந்து நின்று விளையாடுமாம். அவ்வாறு இருக்கும் போது கடந்த 13-ம் தேதி பூனையை காணவில்லை.
இதனால் உரிமையாளர் சாய் சங்கர் ஆசையாக வளர்த்து வந்த பூனையை காணவில்லை என அதிர்ச்சி அடைந்து, பல இடங்களில் தேடி உள்ளார். இதையடுத்து சாய்சங்கர் சரவணப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில், பூனை திருடியவர்கள் குறித்து பதிவாகியிருந்தது. வீட்டு வாசலில் பூனை விளையாடிக் கொண்டிருக்கிறது. அங்கு இரு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் ஒருவர் வாகனத்தை ஓட்ட, ற்றொருவர் அந்த பூனையை பிடித்துக் கொண்டு செல்வது பதிவாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை