nirmala-sitharaman | தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் சொத்துக்களை திருடுகிறார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உலக மரபு விழாவை முன்னிட்டு குடைவரை கோவில் கண்காட்சி மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் பாரம்பரியம் மக்களிடம் செல்லவில்லையே என்ற மனவேதனை என்னிடம் காணப்பட்டது. மேலும் நமது பாரம்பரியத்தை எடுத்துக் கூறும்போது அரசியல் நுழைகிறது.
பல சர்ச்சைகள் வருகின்றன. ஜனநாயக நாட்டில் சர்ச்சைகள் வரலாம். எல்லோரும் என்னவேண்டும் என்றாலும் பேசலாம்” என்றார்.
தொடர்ந்து, குடைவரை கோவில்கள் பற்றி பேசுகையில், “தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அழகாக வடிவமைத்துள்ளனர். அமைச்சர் வருகிறார் என பாரம்பரிய பொருள்கள் என்று கூட பார்க்காமல் வெள்ளையடித்து விடுகின்றனர்.
இதற்குப் பின்னால் இருக்கும் சரித்திரத்தை பார்ப்பதில்லை. குடைவரைக் கோவில்களுக்கும் நமது எழுத்துக்கும், ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றுக்கும் இடையே தொடர்பு உள்ளது” என்றார்.
மாணவர்களிடம் தமிழ் கலாசாரம் குறித்து கூறுகையில், “நான் என்ஜீனியர், டாக்டர் என எது வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் தமிழ் மரபுகளை அறிந்து அவற்றை பாதுகாக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோவில் சொத்துக்களும் திருடப்படுகின்றன; இது யாருக்கு செல்கிறது எனத் தெரியவில்லை” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“