திருச்சி மாவட்டம், முசிறி காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த காவல் நிலைய விருது பெற்ற முசிறி காவல் நிலைய போலீசார் டி.ஜி.பி சைலேந்திரபாபுவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திருச்சி மாவட்டம், முசிறி காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

முசிறி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமை காவலர் மகாமுனி மற்றும் காவலர் ஆனந்தராஜ் ஆகியோர் டி.ஜி.பி அலுவலகத்தில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து விருதினை காண்பித்தனர். அவர்களை டி.ஜி.பி சைலேந்திர பாபு பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள். அப்போது, காவல்துறை கூடுதல் இயக்குனர், சட்டம் மற்றும் ஒழுங்கு சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“