தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்க அண்ணாமலை நடை பயணம்: தொடங்கி வைத்த அமித்ஷா பேச்சு

விழாவில் பேசிய அமித் ஷா, “என் மண் என் மக்கள் நடைபயணம் அரசியல் சார்ந்தது அல்ல; இது தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்கான நடைபயணம்” என்றார்.

விழாவில் பேசிய அமித் ஷா, “என் மண் என் மக்கள் நடைபயணம் அரசியல் சார்ந்தது அல்ல; இது தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்கான நடைபயணம்” என்றார்.

author-image
WebDesk
New Update
Union Minister Amit Shah flaged off Annamalais My soil My People Padayatra

என் மண் என் மக்கள் நடைபயண தொடக்க விழாவில் பேசிய அமித் ஷா

தமிழக பாரதிய ஜனதா தலைவர் கு. அண்ணாமலை, ராமேஸ்வரத்தில் இருந்து, “என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

Advertisment

இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். அப்போது உரையாற்றிய அமித் ஷா, “தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன்” எனக் கூறி தனது உரையை தொடங்கினார்.
முன்னதாக ட்விட்டரில், “அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்தை தொடங்கப்போகிறேன்” எனத் தமிழில் தெரிவித்திருந்தார்.

,
Advertisment
Advertisements

தொடர்ந்து, விழாவில் பேசிய அமித் ஷா, “என் மண் என் மக்கள் நடைபயணம் அரசியல் சார்ந்தது அல்ல; இது தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்கான நடைபயணம்” என்றார்.
மேலும், “இது தமிழக கலாசாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கான நடைபயணம். பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியின் பெருமையை உலகெங்கிலும் பேசிவருகிறார்.

,

இந்த நிலையில் தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை மேலும் வலுப்படுத்தி பிரதமரின் செய்தியை அனைத்து மக்களிடத்திலும் எடுத்துச் செல்லும்” என்றார்.
இதற்கிடையில், “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டுவர நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Bjp Amit Shah Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: