“காவிரி நிதி நீர் பிரச்னைக்கு சட்டப்படி வறட்சி காலங்களில் சட்டப்படி காவிரி பங்கீடு திட்டம் உதவாது. காவிரி விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது.” என்று மத்திய அமைச்சர் குமாரசாமி கூறினார்.
கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையாகும். இந்த பிரச்னைக்கு இதுவரை எந்த அரசாங்கத்தாலும் நிரந்தர தீர்வு காண முடியாமல் உள்ளது. இருமாநில அரசுகள் மட்டுமின்றி மத்திய அரசும் காவிரி பிரச்னையில் அரசியல் செய்து வருவதாக தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனா். கோடை காலம் வந்தாலே, காவிரி பிரச்னை தலைதூக்கி விடுகிறது.
இந்த நிலையில் காவிரி பிரச்னை குறித்து மத்திய அமைச்சரும், கர்நாடகத்தை சேர்ந்தவருமான எச்.டி. குமாரசாமி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “காவிரி நிதி நீர் பிரச்னைக்கு சட்டப்படி வறட்சி காலங்களில் சட்டப்படி காவிரி பங்கீடு திட்டம் உதவாது. காவிரி விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது. நீர்ப் பங்கீடு குறித்து இருமாநில அரசுகளும் பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் give and take policy முறை தான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு" என்று எச்.டி. குமாரசாமி கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“