மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (நவம்பர் 8) ஆய்வு செய்தார். ஆய்வு செய்து அங்கிருந்த பயணிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் வடபழனியில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருமாறு அதிகாரிகளை அமைச்சர் வலியுறுத்தினார். வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு துறையையும் (DoNER) கிஷன் ரெட்டி கூடுதலாக கவனித்து வருகிறது. ஆலந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி அனைத்து நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மாநிலங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு மெட்ரோ ரயில் பணிகள் மட்டுமின்றி கூடுதல் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலின் 1-ம் கட்ட திட்ட பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, 2-ம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மத்திய அமைச்சருடன் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் உடனிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil