மத்திய இணையமைச்சர் எல். முருகன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், “தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தொண்டர்கள் கடுமையாக தாக்கப்படுவதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
நடிகை கெளதமி விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும். அவர் பாரதிய ஜனதா கட்சிக்காக உழைத்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை.
ஆனால் சனாதனத்தை ஒழிப்போம் என்கிறார்” எனக் குற்றஞ்சாட்டினார். நடிகை கௌதமி இன்று பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகினார்.
முன்னதாக அவருக்கு பாஜக நிர்வாகி அழகப்பன் அறிமுகமாகி உள்ளார். அவரிடம் திருவள்ளூர் மாவட்டத்தில் கோட்டையூரில் உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்று தருமாறு கவுதமி கேட்டிருந்தார். அந்த பணத்தை தனது மகளின் எதிர்காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் நினைத்துள்ளார்.
ஆனால் இதில் மோசடி நடந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை வருமான வரி நோட்டீஸ் கிடைத்த பின்புதான் அவர் உணர்ந்துள்ளார்.
அதாவது, நிலத்தில் பிரச்சினை இருப்பதாக கூறி ரூ 4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக 2 தவணையில் பணத்தை கொடுத்துவிட்டு கவுதமியிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“