முன்பதிவில்லாத பெட்டிகளில் புதிய மாற்றம்... இனி 150 டிக்கெடுகள் மட்டுமே விற்பனை!

முன்பதிவில்லா பெட்டிகளில் சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வே முடிவு செய்துள்ளது. நீண்ட தூர ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவில்லாத ஒரு பெட்டிக்கு தலா 150 டிக்கெட்டுகள் மட்டும் வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

முன்பதிவில்லா பெட்டிகளில் சில மாற்றங்களை கொண்டு வர ரயில்வே முடிவு செய்துள்ளது. நீண்ட தூர ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவில்லாத ஒரு பெட்டிக்கு தலா 150 டிக்கெட்டுகள் மட்டும் வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

author-image
WebDesk
New Update
railway Minister

முன்பதிவில்லாத பெட்டிகளில் புதிய மாற்றம்... இனி 150 டிக்கெடுகள் மட்டுமே விற்பனை!

இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட் (Tatkal) திட்டத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி கடந்த 1-ம் தேதி முதல், ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் முதல் (ஜூலை 15-ம் தேதி) ஆதாருடன் ஓடிபி (OTP) அடிப்படையிலான உறுதிப்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதிகாரப்பூர்வ பி.ஆர்.எஸ். (PRS) கவுன்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பயனர் மொபைலுக்கு அனுப்பப்படுகிறது. ஓடிபி (OTP)யை உறுதிப்படுத்திய பின்பே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு வழங்க முடியும். நேற்று முன் தினம் முதல் நடைமுறைக்கு வந்தது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் பயணச்சீட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேலும் சில திட்டங்களையும் இந்திய ரயில்வே பரிசீலித்து வருகிறது. ரயில் பெட்டிகளில் பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல, முன்பதிவில்லா பெட்டிகளில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

74,000 ரயில் பெட்டிகள் மற்றும் 15 ஆயிரம் ரயில் என்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. என்ஜின்களில் பொருத்தப்படும் கேமராவில் மைக்ரோ போன் பொருத்தபட உள்ளது. ஒவ்வொரு என்ஜினிலும் 6 அதிநவீன கேமராக்கள் வைக்கப்பட உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களில், ரயில் 100 கி.மீ. வேகத்தில் சென்றாலும் காட்சிகள் தத்ரூபமாக பதிவாகும்.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்த நிலையில், நெரிசலில் சிக்கி 18 பேர் பலியானார்கள். ஒரே நேரத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க ஏராளமானோருக்கு டிக்கெட் வழங்கியதால் இந்த சம்பவம் அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய திட்டத்தை ரயில்வே கொண்டுவர உள்ளது. இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் புதுடெல்லியில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது, நீண்ட தூர ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவில்லாத பெட்டிக்கு தலா 150 டிக்கெட்டுகள் மட்டும் வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. எடுத்துக்காட்டாக, எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் கொல்லம், அனந்தபுரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா 4 பெட்டிகள் என மொத்தம் 12 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது. ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் என மொத்தம் 1,800 டிக்கெட்டுகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வழங்கப்படும்.

முன்பதிவில்லாத பெட்டியில் 90 முதல் 100 பேர் வரை பயணிக்க இருக்கை வசதி உள்ளது. ஆனால், தினந்தோறும் ஒவ்வொரு ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் 300 முதல் 350 பேர் மூச்சுத் திணறல் ஏற்படும் வகையில் நெருக்கியவாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பயணிகள் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இந்த புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதுகுறித்து சாதக, பாதகங்களை பரிசீலனை செய்து நடைமுறைகள் வகுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர். 

indian railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: