கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் சுகாதாரமற்ற முறையில் இருக்கும் கழிப்பிடம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், மனித உரிமைகள் ஆணைய நபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisment
கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு தினம் தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்திற்குள் இருக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், இதற்கு பொதுமக்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு பணத்தை செலவழிக்கும் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு அலுவலகங்களில் இது போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள செலவழிப்பதில்லை எனவும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
மேலும் அதிகாரிகள் உடனடியாக இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அரசாங்கம் உரிய முறையில் தூய்மையான கழிப்பிடம், குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இது குறித்து மனித உரிமைகள் ஆணைய அதிகாரி ஒருவர் இரண்டு நாளுக்கு முன்பு மனு ஒன்றை அளிக்க மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தில் சுகாதாரமற்ற முறையில் இருக்கும் கழிப்பிடத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், சுகாதாரமற்ற கழிப்பிடம் குறித்து வீடியோவாக பதிவு செய்து பொதுமக்கள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள சுகாதாரமற்ற கழிப்பிடத்தை காணும் போது அலுவலகம் எவ்வளவு கேவலமான மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது எனவும் இதனை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பாக மாநகராட்சி அலுவலகத்திற்கு உள்ளேயே இதுபோன்று அலட்சியமாக செயல்பட்டால் பொதுமக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil