By: WebDesk
September 18, 2018, 4:43:12 PM
h. raja controversy, ஹெச். ராஜா
புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக-வை சேர்ந்த ஹெச். ராஜா நீதிமன்றத்தையும் காவல்துறையையும் அவமதித்து பேசியதன் மற்றொரு வீடியோ வெளிவந்துள்ளது.
ஹெச். ராஜா மற்றொரு வீடியோ :
புதுக்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில், நீதிமன்றம் தடை செய்த பகுதியில் ஊர்வலம் கொண்டு செல்ல முயற்சித்தார். அதனை தடுத்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா, நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து அவதூறு பேச்சில் ஈடுபட்டார்.
இதையடுத்து அவர் அந்த வீடியோவில் பேசியது அவரின் குரலே இல்லை என்றும் யாரோ எடிட் செய்திருக்கிறார்கள் என்றும் மறுப்பு தெரிவித்தார். தற்போது அவர் நீதிமன்றத்தில் 4 வாரங்களில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.
Read More : எங்கள் சிங்கம் ஹெச்.ராஜா இங்க தான் இருக்காரு, முடிந்தால் கைது செய் : போலீசுக்கு சவால் விடும் பாஜக தொண்டர் வீடியோ!
இந்நிலையில் சமீபத்தில் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு வீடியோவும் வெளியே வந்துள்ளது. அதில், காவல்துறை பற்றி ஆவேசமாக பேசியிருக்கிறார். மேலும், “பல மாற்றங்களை கொண்டு வந்தது லேடி இல்ல மோடி. இந்த பாரதத்தின் பிரதமர் மோடி.” என்கிறார்.
மேலும், “அண்ணா வேண்டாம், பெரியார் வேண்டாம், மோடி மட்டும் போதும். பிரதமர் மோடிக்கு ஜெ.” என்று கோஷங்கள் எழுப்பியும் வாக்குவாதம் செய்கிறார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Unseen video of h raja controversial speech