ஜுன் 3-ம் தேதி அன்று சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தின் வளாகத்தில் கலைஞரின் கம்பீர சிலை நிறுவப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் 26-ம் தேதி, சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்தார்.
Advertisment
அதன்படி, ரூ1.7 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 16 அடியில் தயாராகும் சிலையை, 12 அடி பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு இடையே கருணாநிதி சிலை நிறுவப்படவுள்ள நிலையில், அதற்கான பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் மே 28ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கலைஞர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, சிலை திறப்பு விழாவுக்காக நிகழ்ச்சி 5.45 மணியளவில் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. விழாவில் கலந்துகொள்ளும் வெங்கையா நாயுடு சிறைப்புரையாற்றுகிறார். முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையுரையாற்றுவார் என்றும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழாவில் அமைச்சர்கள், எம்.எல்,ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம், கருணாநிதியின் சிலைத் திறப்புக்கு, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு வரவிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil