லால்குடி அருகே ஸ்டேன் சுவாமி சிலை திறப்பு: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

லால்குடியை அடுத்த விரகாலூா் கிராமத்தில் பிறந்து அருட்பணிக்காகத் துறவு மேற்கொண்டு, மக்கள் பணிக்காகப் படித்து 1975 முதல் 1990 வரை ஆசிரியராகப் பணியாற்றி, ஜாா்ஜ்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவா் ஸ்டேன் சுவாமி.

லால்குடியை அடுத்த விரகாலூா் கிராமத்தில் பிறந்து அருட்பணிக்காகத் துறவு மேற்கொண்டு, மக்கள் பணிக்காகப் படித்து 1975 முதல் 1990 வரை ஆசிரியராகப் பணியாற்றி, ஜாா்ஜ்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவா் ஸ்டேன் சுவாமி.

author-image
WebDesk
New Update
sten swamy

லால்குடி அருகே ஸ்டேன் சுவாமி சிலை திறப்பு: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

திருச்சி லால்குடி அருகே விரகாலூரில் ஸ்டேன் சுவாமி சிலையை கனிமொழி எம்.பி. நேற்று மாலை திறந்துவைத்தாா். லால்குடியை அடுத்த விரகாலூா் கிராமத்தில் பிறந்து அருட்பணிக்காகத் துறவு மேற்கொண்டு, மக்கள் பணிக்காகப் படித்து 1975 முதல் 1990 வரை ஆசிரியராகப் பணியாற்றி, ஜாா்ஜ்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவா் ஸ்டேன் சுவாமி.

Advertisment

பல்வேறு போராட்டங்கள் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவா், நோய் வாய்ப்பட்டு கடந்த 2021 ஜூலை 5-ம் தேதி இறந்தாா். இதையடுத்து, இவரது நினைவாக விரகாலூரில் தமிழக ஆயா் பேரவை மற்றும் விரகாலூா் ஸ்டேன் சுவாமி கூட்டமைப்பின் சாா்பில் ஸ்டேன் சுவாமி சிலை திறப்பு விழா மற்றும் ஜனநாயக மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கும்பகோணம் ஆயா் ஜீவானந்தம் தொடக்க உரையாற்றினாா்.

திருச்சி தி.மு.க. மத்திய மாவட்டச் செயலா் வைரமணி, காங்கிரஸ் தலைவா் கலைச்செல்வன், விசிக மாவட்டச் செயலா் அன்புச் செல்வன், மாா்க்சிஸ்ட் புகா் மாவட்டச் செயலா் ஜெயசீலன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்டத் தலைவா் தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பு தேசியச் செயலா் ஹென்றி டிபேன், மக்கள் சிவில் உரிமைக்கழக தேசியச் செயலா் பாலமுருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முஹமது அபூபக்கா், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவா் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், லால்குடி எம்.எல்.ஏ. செளந்தரபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் வேலுச்சாமி, கடலூா், பாண்டிச்சேரி பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட், இந்திய கம்யூ.மாநிலச் செயலா் முத்தரசன், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் சண்முகம் உள்ளிட்டோா் சிறப்புரையாறினா். ஸ்டேன் சுவாமி சிலையை திமுக துணைப் பொதுச்செயலரும் எம்.பி. யுமான கனிமொழி திறந்து வைத்தாா். தொடா்ந்து விசிக தலைவா் தொல். திருமாவளவன் கலந்து கொண்டாா்.

Advertisment
Advertisements

மாநாட்டில், தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி பேசியதாவது; ஸ்டேன்சாமி தமிழகத்தை கடந்து எங்கெல்லாம் மக்கள் அவர்கள் வாழ்வை மீட்டெடுக்க வேண்டும் என்று போராடுகின்றனரோ அங்கு போய் நின்றவர் ஜார்கண்ட் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்காக போராடியவர். யார் கேள்வி எழுப்பினாலும் அவர்களுக்கு எதிரான கேள்வி என்றல்ல தேசத்திற்கு எதிரான கேள்வி என்று கட்டமைக்கப் படுகின்றது. 84 வயதில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார், பார்கின்சம் நோயால் பாதிக்கப்பட்டவர் கை நடுக்கத்தால் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டார்.

அதற்காக சிறையில் உள்ள அவருக்கு தண்ணீர் குடிக்க ஒரு ஸ்ட்ரா கூட கொடுக்க முடியாமல் தடுக்கப்பட்டது. யார் எதிராக கேள்வி கேட்டாலும் அவர்கள் தேச துரோகிகள் அல்லது அவர்களை கொலை செய்யும் நிலை உள்ளது மதம், மற்றும் சாதிய ரீதியாகப் பிரிவிணையை ஏற்படுத்தி அரசியல் செய்யப்படுகின்றது. எந்த சட்டம் வந்தாலும் மாநில மொழியில் இருக்காது. அந்த திட்டத்தின் பெயரே எந்த மொழி என்று நமக்கு தெரியாது. மொழி ஆதிக்கத்தால் உரிமைகளை பறிப்பது சட்டத்தால் மாநில உரிமைகளும் மக்கள் உரிமைகளும் பிரிக்கப்படுகின்றது. இவற்றை மீட்டெடுக்க தான் நமது முதல்வர் போராடி வருகின்றார். இது மற்றொரு விடுதலை போராட்டம், தலைமுறைக்கான போராட்டம்.
சுயமரியாதையை விட எதும் பெரிது அல்ல, தனி மனித மசோதாவாக மக்களுக்காக போராடுபவர்களை விடுவிக்க தீர்மானம் கொண்டு வருவேன் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது; கேட்பாறற்றவர்களுக்காக உழைத்தவர், ஜார்கண்ட் பழங்குடியின மக்களுக்காக போராடியவர், அந்த மக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தியவர், அவர்களுக்கு மனித உரிமைகள் உள்ளது, சட்டம் உள்ளது என்று அவர்களுக்கு எடுத்து கூறியவர் ஸ்டேன் சாமி. இது எப்படி சட்ட விரோதமாகும். அமித்ஷா அடிக்கடி சொல்கின்றார், நக்சல்களை ஒழிப்போம் என்று நமது பார்வையில் அவர்கள் தோழர்கள், மக்களுக்காக ஆயுதங்களை எடுத்து போராடுகின்றனர்.

காடுகளை அழித்து, வனவிலங்குகளை அழித்து கார்பெட்களுக்கு கொடுக்க நினைக்கின்றனர், அவர்கள் எங்கள் தோழர்கள் தேர்தலில் விரும்பாதவர்கள், ஆயுதம் ஏந்தினால்தான் புரட்சி என்று போராட்டத்தில் உள்ளனர். அதில் நாம் வேறுபடுகின்றோம். நாம் நாடாளுமன்ற தேர்தல், ஜனநாயக முறையை ஏற்கின்றோம், அவர்களோடு தொடர்பு வைத்திருந்தால் என்ன தவறு. ஸ்டேன் சுவாமி மடிக்கணினியை என்ஐஏ கைபற்றினர். ஆனால், அதை ஆய்வு செய்தபோது அதில் யோரோ அவருக்கு தெரியாமல் அனுப்பியது உறுதியானது.  கம்யூனிஸ்ட்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட்டத்தில் நிர்ப்பவர்கள் என்றார்.

முன்னதாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மறைமாவட்ட ஆயா்கள், பாதிரியா்கள், அருட்சகோதரிகள், பல்வேறு கட்சியினா் தீா்மானங்களை நிறைவேற்றினா். ஸ்டேன் சுவாமி மக்கள் கூட்டணி ஒருங்கிணைப்பாளா் சந்தனம் வரவேற்றாா். பங்குத் தந்தை ஆரோக்கியசாமி நன்றி கூறினாா்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: