சென்னை ஜி.எச் அருகே மருத்துவ மாணவர் மீது துப்பாக்கிச்சூடு; உ.பி-யைச் சேர்ந்த நபர் கைது

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நபர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் முதுகலை மருத்துவ மாணவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நபர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் முதுகலை மருத்துவ மாணவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

author-image
WebDesk
New Update
Two Patients on Ventilator died at Rajiv Gandhi Hospital Tamil News

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு அருகில் உள்ள டீக்கடையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நபர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் முதுகலை மருத்துவ மாணவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு அருகில் உள்ள டீக்கடையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நபர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் முதுகலை மருத்துவ மாணவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, மருத்துவ மாணவரும் பொதுமக்களும் அவரை மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 

Advertisment

26 வயதான முதுகலை மருத்துவ மாணவர் ரோஹன், இங்குள்ள சென்னை மருத்துவக் கல்லூரி-ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்திற்கு அருகில் உள்ள டீக்கடை அருகே இருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்த இருவரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கியால் சுட்டதில், அதிர்ஷ்டவசமாக குறி தவறியது. இதையடுத்து, மருத்துவர், பொதுமக்களின் உதவியுடன் துப்பாக்கியால் சுட்ட நபரை உடனடியாக கைது செய்ததாக அதிகாரி தெரிவித்தனர். அவருடன் இருந்த மற்றொரு நபர், அங்கிருந்து தப்பியோடினார்.

கைது செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரித்திக் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தப்பியோடியவர் அமித் குமார் என்பதும் அவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment
Advertisements

முதற்கட்ட விசாரணையின்படி, அமித் குமார் முதுகலை மருத்துவ மாணவியான அவரது காதலி தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் கோபமடைந்தார். இதற்கு, ரோஹனுடன் மருத்துவ மாணவிக்கு இருந்த நட்பு தான் காரணம் என்று அமித் குமார் சந்தேகப்பட்டார். அதனால் அவரைக் கொல்ல திட்டமிட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: