வடசென்னை மக்களை ஊக்குவிக்கும் வகையில், திருவொற்றியூரில் உள்ள 5 கிலோமீட்டர் கடற்கரையை 30 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தவும், காசிமேடு கடற்கரையும் 6 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு சட்டசபையில் அறிவித்துள்ளார்.
சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற வகையில், நீலாங்கரை முதல் அக்கரை வரையிலான கிழக்கு கடற்கரையில் சைக்கிள் பாதை மற்றும் நடைபாதையை அமைக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை ரூ. 20 கோடி செலவில், 5 கிலோமீட்டருக்கு, திட்டமிடல் ஆணையம் உருவாக்கித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுசேரி அருகே வனப்பகுதி மேம்பாடுகளால் சீரழிந்து வருவதால், சி.எம்.டி.ஏ., 50 ஏக்கர் நிலப்பரப்பில், 5 கோடி ரூபாய் மதிப்பில், >நகர்ப்புற காடுகளை உருவாக்கவுள்ளது. தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்துடன் (TNGCC) ஒருங்கிணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மீஞ்சூர், வெள்ளலூர், திருநாகேஸ்வரம் மற்றும் முடிச்சூர் ஆகிய இடங்களில் வெளிவட்டச் சாலையில் (ORR) உடற்பயிற்சி பூங்காக்கள் அமைக்கப்படும்.
கொண்டித்தோப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் டயாலிசிஸ் மையத்தை கட்ட ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார்.
மேலும், சிந்தாதிரிப்பேட்டையில் பூங்கா ஒன்று ரூ.5 கோடியிலும், கோடம்பாக்கத்தில் புலியூர் கால்வாய் ரூ.5 கோடியிலும் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil